பிரபல ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர் தற்போது டிக் டாக் தளத்தில் தொடர்ந்து வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.
தமிழ், தெலுங்கு, இந்தி என்று இந்திய மொழி பாடல்களுக்கும் நடனமாடியும், நடித்துக் காட்டியும் ஏராளமான இந்திய ரசிகர்களையும் அவர் வெகுவாகக் கவர்ந்துள்ளார். டிக் டாக் செயலியில் இணைந்து இரண்டு மாதத்திற்குள்ளாக 41 லட்சம் பேரால் வார்னர் பின்தொடரப்பட்டு வருகிறார்.
சிறந்த வீடியோக்களை செய்து ரசிகர்களின் பாராட்டுக்களைப் பெறுவதுடன் சிறப்பாக வீடியோக்கள் செய்துவரும் பிற டிக் டாக் பயனாளர்களுக்கும் தனது பாராட்டுக்களை அவர் தெரிவித்து வருகிறார்.
இந்த நிலையில் சாதாரண சார்ட் பேப்பரில் கையில் பெயின்ட் தேய்த்து அழகான ஓவியம் வரைந்த இந்திய இளைஞர் ஒருவரை வார்னர் டிக் டாக்கில் பாராட்டியுள்ளார்.
@davidwarner31 ##duet with @mahi.artist this is absolutely amazing, now I need to attempt this with the girls. ##talent ##fyp ##art ##tiktok ##edutok
பெயின்ட் பிரஷ், பென்சில், பேனா என்று எதையும் பயன்படுத்தாமல் வெறும் கைகளில் கறுப்பு நிற பெயின்டைத் தடவி சார்ட் பேப்பரில் ஓவியம் ஒன்றை அவர் வரைகிறார். குழந்தைப் பருவம் முதல் மரணம் வரை மனித வாழ்க்கையின் ஐந்து படிநிலைகள் குறித்து அவர் வரைந்த ஓவியம் வார்னரை மட்டுமல்லாது அனைவரையும் வெகுவாக கவர்ந்துள்ளது.
தன்னம்பிக்கையும், கடின உழைப்பும் துணை இருந்தால் கையில் இருக்கும் பொருட்களை வைத்துக் கொண்டும் சாதனைகள் புரியலாம் என்பதை அந்த இளைஞர் அனைவருக்கும் உணர்த்தியுள்ளார். வார்னரின் பாராட்டுக்களைப் பெற்றதன் பின்னராக இந்தியாவை சேர்ந்த அந்த இளைஞர் உலக அரங்கில் கவனம் பெற்று வருகிறார்.
**-இரா.பி.சுமி கிருஷ்ணா**�,”