அஜித் விஜய் நடித்த துணிவு வாரிசு திரைப்படங்கள் இன்று (ஜனவரி 11) அதிகாலை சிறப்பு காட்சிகளுடன் திரையரங்குகளில் வெளியானது.
இரண்டு திரைப்படத்திற்கும் தமிழ் சினிமா நடிகர்கள் மற்றும் இயக்குனர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
அந்தவகையில் நடிகர் அருண் விஜய், துணிவு திரைப்படம் ரசிகர்களுக்கு சிறப்பு விருந்தாகவும், இப்படத்தின் சண்டைக்காட்சிகள், திரைக்கதை, நடிப்பு, படத்தில் கூறப்பட்ட கருத்து ஆகிவை அருமையாக இருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
நடிகை திரிஷா மற்றும் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி ஆகிய இருவரும் கல்பாத்தி திரையரங்கில் துணிவு மற்றும் வாரிசு திரைப்படத்தை பார்த்துள்ளனர். அந்த புகைப்படத்தை அர்ச்சனா கல்பாத்தி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

நடிகர் சரத்குமார் , “தமிழர்களின் பாரம்பரிய, கலாச்சார அறுவடைத் திருநாளாம் தைத்திருநாளை குடும்பங்களுடன் மகிழ்வுடன் கொண்டாட, திரையரங்கில் இன்று வெளியாகும் வாரிசு திரைப்படம் மாபெரும் வெற்றியடைய வாழ்த்துக்கள்.” என்று தெரிவித்துள்ளார்.
இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ், வாரிசு மற்றும் துணிவு திரைப்படங்கள் வெற்றியடைய வாழ்த்துக்கள் என்று தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
செல்வம்
திருப்பதி: சொர்க்கவாசல் தரிசனம் இன்றுடன் நிறைவு – நாளை முதல் இலவச தரிசன டிக்கெட்டுகள்!