16 மில்லியன் பார்வைகளை கடந்தது ‘துணிவு’ ட்ரெய்லர்!

Published On:

| By Jegadeesh

இயக்குனர் ஹெச்.வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் குமார் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் துணிவு.

இந்த படத்தில் நடிகை மஞ்சுவாரியர், சமுத்திரக்கனி, ஜி.எம்.சுந்தர், மகாநதி சங்கர், ஜான் கொக்கன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

போனி கபூர் தயாரித்துள்ள இந்த படத்தின் தமிழ்நாடு வெளியீட்டு உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் பெற்றுள்ளது.

‘துணிவு’ திரைப்படம் வரும் பொங்கலுக்கு வெளியாகவுள்ளது. சமீபத்தில் ‘துணிவு’ படத்தின் ‘சில்லா சில்லா’, காசேதான் கடவுளடா’ ஆகிய பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், படத்தின் ட்ரெய்லர் நேற்று (டிசம்பர் 31 ) வெளியானது.

தற்போது இந்த ட்ரெய்லர் யூடியூப்பில் 16 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது. இதை அஜித் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர்.

மு.வா.ஜெகதீஸ் குமார்

2023 புத்தாண்டு: தலைவர்கள் வாழ்த்து!

தமிழகம், புதுவையில் களைகட்டிய புத்தாண்டு கொண்டாட்டம்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share