துணிவு ஃபர்ஸ்ட் சிங்கிள் அப்டேட்!

Published On:

| By Monisha

நடிகர் அஜித் நடிப்பில் உருவாகிவரும் துணிவு படத்தின் முதல் பாடல் டிசம்பர் 9 ஆம் தேதி வெளியாகும் என தயாரிப்பாளர் போனிகபூர் அறிவித்துள்ளார்.

நடிகர் அஜித் வலிமை படத்தைத் தொடர்ந்து எச். வினோத் இயக்கத்தில் துணிவு படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் மஞ்சு வாரியர், ஜான் கோக்கன், அமீர், பாவனி உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்.

போனி கபூர் தயாரிக்கும் இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையமைத்துள்ளார். ஆக்‌ஷன் த்ரில்லர் படமாக வெளியாகவிருக்கும் துணிவு படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.

பொங்கலுக்கு வெளியாக உள்ள இந்த படத்தின் முதல் பாடல் விரைவில் வெளியாகும் என்ற செய்திகள் தொடர்ந்து வெளியாகின. ஆனால் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை என்பது அஜித் ரசிகர்களுக்கு தொடர் ஏமாற்றத்தையே அளித்தது.

இந்நிலையில் துணிவு படத்தின் முதல் பாடல் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளார் தயாரிப்பாளர் போனி கபூர்.

https://twitter.com/BoneyKapoor/status/1599742910337273857?s=20&t=sOq63aDCv-bkwYSFYNc1ZA

அதன்படி துணிவு படத்தின் முதல் பாடல் “சில்லா சில்லா” டிசம்பர் 9 தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மோனிஷா

பணம், பரிசு வழங்கி மதமாற்றம்: உச்ச நீதிமன்றம் வேதனை!

தொடங்கியது ஜி20 மாநாடு ஆலோசனைக் கூட்டம்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share