14 வருடங்களுக்கு பிறகு… சிம்புவிற்கு ஜோடியான திரிஷா..!

Published On:

| By Manjula

சிம்பு-திரிஷா இருவரும் மீண்டும் சேர்ந்து நடித்து வருகின்றனர். அதுகுறித்த விவரங்களை இங்கே பார்ப்போம்.

அலை, விண்ணைத்தாண்டி வருவாயா என இரண்டு படங்களில் சிம்பு, திரிஷா இருவரும் சேர்ந்து நடித்துள்ளனர். இதில் விண்ணைத்தாண்டி வருவாயா மிகப்பெரிய பிளாக்பஸ்டர் ஆனதுடன், இன்றும் காதலர்களின் தேசிய கீதமாகவும் உள்ளது.

இந்த நிலையில் இருவரும் 14 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் சேர்ந்து நடித்து வருகின்றனர். மணிரத்னம், கமல்ஹாசனின் தக் லைஃப் படத்தில் தான் இருவரும் ஜோடியாக நடித்து வருகின்றனர்.

இப்படத்தில் இருந்து ஜெயம் ரவி, துல்கர் சல்மான், சித்தார்த் என அடுத்தடுத்து மூன்று ஹீரோக்களும் அதிரடியாக விலகினர்.

இதையடுத்து துல்கருக்கு பதிலாக, சிம்பு இப்படத்தில் இணைந்து நடித்து வருகிறார். படத்தில் நடித்திட மேலும் சில ஹீரோக்களிடமும் படக்குழு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

தற்போது ஜெய்சல்மார், டெல்லி ஆகிய இடங்களில் படக்குழு விறுவிறுப்பாக ஷூட்டிங் நடத்தி வருகிறது. விரைவில் கமலும் இணையவிருக்கிறார்.

இறுதிக்கட்ட படப்பிடிப்பினை செர்பியாவில் நடத்திட படக்குழுவினர் திட்டமிட்டு இருக்கின்றனர். தற்போது சிம்பு, திரிஷா, நாசர், கவுதம் கார்த்திக், ஐஸ்வர்யா லட்சுமி, அபிராமி, ஜோஜு ஜார்ஜ் ஆகிய நட்சத்திரங்கள் இப்படத்தில் பிஸியாக நடித்து வருகின்றனர்.

லேட்டஸ்ட் நிலவரப்படி தக் லைஃப் வருகின்ற 2024-ம் ஆண்டு சம்மருக்கு திரையரங்குகளில் வெளியாகும் என தெரிகிறது.

மஞ்சுளா

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

ராகுல் vs பினராயி: கேரளாவில் நடக்கும் போர்…கிறித்தவர் வாக்குகளை குறிவைக்கும் பாஜக!

புதிய சீரியலில் களம் இறங்கும் ‘பிக்பாஸ்’ பிரபலம்!

சாண்டல்வுட்டில் களமிறங்கும் ஐஸ்வர்யா ராஜேஷ்… ஹீரோ யாருன்னு பாருங்க!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share