ADVERTISEMENT

‘துடிக்கிறது மீசை’ பட தொடக்க விழா கோலாகலம்!

Published On:

| By Jegadeesh

Thudikkiradhu Meesai Movie Launch

யோகி வீர் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பாளர் பி.ராம் தயாரிப்பில், இயக்குநர் எம்.ஜே.இளனின் இயக்கத்தில் உருவாகும் புதிய திரைப்படம் ‘துடிக்கிறது மீசை.’

இப்படத்தில் முருகதாஸ், புகழ், மாறன், யோகிதா, வர்ஷினி, அக்ஷிதா ஆகியோர் நடிக்கிறார்கள். நாயகியாகவும் குணச்சித்திர வேடங்களில் பிரபலமான நட்சத்திரங்கள் நடிக்கவுள்ளனர்.

ADVERTISEMENT

இந்த ‘துடிக்கிறது மீசை’ படம் பற்றி இயக்குநர் எம்.ஜே. இளன் பேசும்போது,

“நான் இயக்குநர் எஸ்.டி.சபா அவர்களிடம் பல படங்களில் பணியாற்றியுள்ளேன். தயாரிப்பாளர், இயக்குநர் கலைப்புலி தாணு அவர்களிடமும் பணியாற்றி சினிமாவில் பல துறைகள் பற்றியும் அறிந்து அனுபவம் பெற்று இருக்கிறேன்.

ADVERTISEMENT

இன்றைய சினிமாவின் ஆரோக்கியமான விஷயமாக எனக்கு ஒன்று தோன்றுகிறது. இன்று எத்தனை பெரிய நட்சத்திரங்கள் நடித்தாலும் அவை வெற்றி பெறும் என்று கூற முடியாது.

ஆனால் நல்ல கதை அம்சம் உள்ள படங்கள், புதுமையான திரைக்கதை உள்ள படங்கள் இப்போது வெற்றி பெற்று வருகின்றன.

ADVERTISEMENT

Thudikkiradhu Meesai Movie Launch

இது ஒரு நல்ல ஆரோக்கியமான என்னைப் போன்ற புதியவர்களுக்கு நம்பிக்கை தரும் ஒன்றாக இருக்கிறது. ‘வீரபாண்டிய கட்டபொம்மன்’ படத்தின் மூலம் புகழ் பெற்ற வசனமான ‘துடிக்கிறது மீசை’ என்பதையே படத்தின் தலைப்பாக வைத்துள்ளோம். இத்தலைப்பு கோபத்தைக் குறியீடாகச் சொல்கிறது.

காதல் தவறில்லை. ஆனால், காதலுக்காக வாழ்க்கையை அழித்துக் கொண்டு தங்கள் எதிர்காலத்தை வீணடிப்பதைத் தவறு என்று சொல்கிற கதை இது. காதலுடன் வாழ்க்கை முடிந்து விடுவதில்லை. காதலில் விழுந்து தன்னை அழித்துக் கொள்ளும் இளைஞர்களைப் பற்றி இந்தக் கதை பேசுகிறது.

Thudikkiradhu Meesai Movie Launch

இக்கதை மதுரையிலிருந்து சென்னைக்குப் பயணிக்கிறது. இந்தக் கதையை இக்காலத்திற்கு ஏற்ற வகையில் நாங்கள் காதல், நகைச்சுவை கலந்து சுவாரசியமாகக் கூறவிருக்கிறோம்…” என்றார்.

இந்தப் படத்தின் தொடக்க விழா நேற்று மாலை சென்னையில் உள்ள ‘ஆம்ப்பில் யார்டு’ ஹோட்டலில் பூஜையுடன் சிறப்பாக நடைபெற்றது.

Thudikkiradhu Meesai Movie Launch

இந்தத் துவக்க விழாவில் இப்படத்தில் நடிக்கும் ‘குக் வித் கோமாளி’ புகழ், முருகதாஸ், சந்தானம் படங்களின் மூலம் பிரபலமான மாறன், இசை அமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா உள்ளிட்ட படக் குழுவினரும், சிறப்பு விருந்தினர்களாகத் தயாரிப்பாளர் நடிகர் கே.ராஜன், நடிகர் செந்தில், இயக்குநர் பேரரசு, மது. தியாகராஜன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

இராமானுஜம்

குடியரசுத்தலைவர் தமிழகம் வருகை: பயண விவரம்!

திருச்சி ஸ்ரீரங்கம் கோபுர சுவர் இடிந்தது!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share