விருதுநகரில் கோயில் திருவிழாவின்போது மின்சாரம் பாய்ந்து மூன்று பேர் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. Three people tragically died
விருதுநகர் மாவட்டம் காரிசேரி மாரியம்மன் கோயிலில் திருவிழா நடைபெற்று வருகிறது. இந்த கோயிலின் கும்பாபிஷேக நிகழ்ச்சியின் 45 வது நாள் பூஜையை முன்னிட்டு இன்று (ஏப்ரல் 14), அந்த ஊரைச் சேர்ந்த மகாலட்சுமி ரேடியோஸ் உரிமையாளர் திருப்பதி ஒலிபெருக்கி மற்றும் அலங்கார விளக்குகள் அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார்.
அப்போது திருப்பதி கொண்டு சென்ற வயர் மின்கம்பத்தில் செல்லும் மின் வயரில் உரசி மின்சாரம் பாய்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த விபத்தில் மைக் செட் உரிமையாளர் திருப்பதி மற்றும் அவரது மனைவி லலிதா, பாட்டி பாக்கியம் ஆகிய மூன்று பேரும் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
அவர்களை காப்பாற்ற சென்ற கவின், தர்மர் ஆகிய இருவருக்கு காயம் ஏற்பட்டு இருவரும் திருத்தங்கல் பகுதியில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த மின்சார விபத்து தொடர்பாக காரிசேரி போலீசார் விசாரித்து வருகின்றனர். Three people tragically died