பாஜக தலைவர் பொறுப்பில் இருந்து அகோரம் உட்பட மூவர் நீக்கம்!

Published On:

| By christopher

Three people, including Agoram, were removed from BJP

மயிலாடுதுறை மாவட்ட பாஜக தலைவர் அகோரம் உட்பட மூன்று முக்கிய நிர்வாகிகளை கட்சி பொறுப்பில் இருந்து நீக்கியதாக அண்ணாமலை இன்று (ஜூன் 23) அறிவித்துள்ளார்.

தருமபுரம் ஆதீனத்தை பணம் கேட்டு மிரட்டிய வழக்கில் மயிலாடுதுறை மாவட்ட பாஜக தலைவர் அகோரம் ஜாமீனில் வெளியே வந்த நிலையில் கட்சி பொறுப்பில் இருந்து இன்று நீக்கப்பட்டுள்ளார்.

ADVERTISEMENT

அவருடன் திருவாரூர் மாவட்ட பாஜக தலைவர் பாஸ்கர் மற்றும் திருவாரூர் மாவட்ட பொது செயலாளர் செந்திலரசன் ஆகியோரும் கட்சி பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக அக்கட்சியின் தலைவர் அண்ணாமலை அறிக்கை வெளியிட்டு தெரிவித்துள்ளார்.

Image

ADVERTISEMENT

திருவாரூரில் பாஜக முன்னாள் விவசாய பிரிவு மாவட்டத் தலைவராக இருந்த மதுசூதனன் மீது கடந்த மாதம் செந்திலரசன் மற்றும் பாஸ்கர் உள்ளிட்ட 12 பேர் கொலைவெறி தாக்குதல் நடத்தினர். இதனையடுத்து அவர்கள் மீது கொலை முயற்சி உள்ளிட்ட 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

ADVERTISEMENT

கிறிஸ்டோபர் ஜெமா

AUSvsAFG : ஆஸ்திரேலியாவின் தொடர் வெற்றி… வேட்டு வைத்த ஆப்கானிஸ்தான்!

சின்ன சின்ன கண்கள் : யுவனின் எமோசனல் பதிவு… பிரபலங்கள் ஆறுதல்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share