சென்னையில் மூன்று புதிய தொழில்நுட்ப பூங்காக்கள்!

Published On:

| By Selvam

Three new IT parks in Chennai

Three new IT parks in Chennai

சென்னையில் மேலும் மூன்று இடங்களில் தொழில்நுட்ப பூங்காக்கள் உருவாகின்றன. இதனால் 5,000-க்கும் மேற்பட்டோருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சென்னையில் முதன்முறையாக 2000-ம் ஆண்டில் டைடல் பார்க் உருவானதில் இருந்து தகவல் தொழில்நுட்பத்துறை வளர்ச்சி அதிகமானது.

பழைய மகாபலிபுரம் சாலை, ரேடியல் சாலை, கிண்டி, பெருங்குடி, போரூர், வண்டலூர், அம்பத்தூர்,  சிறுசேரி உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் ஐடி நிறுவனங்களின் எண்ணிக்கை பல மடங்காகின.

இதைத் தொடர்ந்து மென்பொருள் ஏற்றுமதியில் சென்னை முக்கிய இடத்தை பிடித்துள்ள நிலையில் புதிய தகவல் தொழில்நுட்ப பூங்காக்களும் தொடர்ந்து உருவாக்கப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் ஆவடியை அடுத்த பட்டாபிராமில் தகவல் தொழில்நுட்ப பூங்கா மிகப்பெரிய அளவில் அமைக்கப்பட்டு வருகிறது.

இதுதவிர இப்போது சென்னையின் வெளிவட்ட சாலையின் கிழக்கு பகுதியான மண்ணிவாக்கம், மலையம்பாக்கம் வண்டலூர் பகுதியிலும் புதிதாக தகவல் தொழில்நுட்ப பூங்கா அமைக்க தமிழக அரசு திட்டமிட்டு வருகிறது.

அதன்படி டைடல் பார்க் நிறுவனத்தின் கோரிக்கையை ஏற்று சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் இதற்கு முதற்கட்ட அனுமதியை வழங்கியுள்ளது. இதற்கான நிலப்பரப்பு தேர்வு செய்யப்பட்டு அதை சரிப்படுத்தும் பணிகளும் நடந்து வருகின்றன.

முதலாவதாக மலையம்பாக்கம் பகுதியில் அமையும் தொழில்நுட்ப பூங்காவுக்கு 5.33 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது. ஒரு ஏக்கருக்கு 3 கோடி ரூபாய் என விலை நிர்ணயம் செய்து ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இரண்டாவது ஐடி பூங்கா மண்ணிவாக்கத்தில் 5.04 ஏக்கர் பரப்பளவில் அமைய உள்ளது. இதற்கு ஏக்கருக்கு ரூ.5 கோடி என நில மதிப்பு வழங்கப்பட்டுள்ளது.

மூன்றாவது தொழில்நுட்ப பூங்கா வண்டலூரில் 0.5 ஏக்கர் பரப்பளவில் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இங்கு நில மதிப்பு ஏக்கருக்கு ரூ.8.05 கோடி மதிப்பாக உள்ளது.

இந்த மூன்று புதிய தகவல் தொழில்நுட்ப பூங்காவை ஒன்றரை வருடத்தில் கட்டி முடிக்க அரசு திட்டமிட்டுள்ளது. இதன்மூலம் 5,000-க்கும் மேற்பட்டோருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்றும் மென்பொருள் ஏற்றுமதியில் மேலும் வளர்ச்சி அடைய இது உதவும் என்றும் இது தொடர்பாக பேசியுள்ள அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர்.

ராஜ்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

பியூட்டி டிப்ஸ்: ஆரோக்கியமான பற்களும் அழகான புன்னகையும் பெற!

டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!

Three new IT parks in Chennai

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share