கடந்த பிப்ரவரி 24-ஆம் தேதி தமிழகத்தில் ஐபிஎஸ் அதிகாரிகள் நான்கு பேருக்கு பதவி உயர்வும், 11 அதிகாரிகளை இடமாற்றம் செய்தும் தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது. Three IPS officer transfer
இந்தநிலையில், மூன்று ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து உள்துறை செயலாளர் தீரஜ் குமார் இன்று (மார்ச் 20) உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி, சென்னை வடக்கு மண்டல சட்டம் ஒழுங்கு கூடுதல் ஆணையராக இருந்த நரேந்திரன் நாயர், காவல்துறை தலைமையக ஐ.ஜி-யாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
காவல்துறை தலைமையக ஐஜியாக இருந்த லக்ஷ்மி, சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவு ஐஜி-யாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
அதன்படி, சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி-யாக இருந்த பிரவேஷ் குமார், சென்னை வடக்கு மண்டல சட்டம் ஒழுங்கு கூடுதல் ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.