சட்டவிரோத மின்வேலியில் சிக்கி 3 யானைகள் பலி: விவசாயி கைது!

Published On:

| By Jegadeesh

தருமபுரி அருகே சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட மின்வேலியில் சிக்கி 3 யானைகள் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

இதனையடுத்து 3 யானைகள் பலியாவதற்கு காரணமான விவசாயி முருகேசன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ADVERTISEMENT

தருமபுரி அருகே உள்ள மாரண்டஹள்ளி பகுதியில் இன்று (மார்ச் 7 ) காலை 3 யானைகள் மின்சார வேலியில் சிக்கி உயிரிழந்திருந்தன. இது தொடர்பாக பாலக்கோடு வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து பாலக்கோடு வனத்துறையினர், போலீசார் இணைந்து விசாரணை நடத்தினர்.

ADVERTISEMENT

இந்த விசாரணையின் போது காளிக்கவுண்டர் கோட்டை கிராமத்தைச் சேர்ந்த விவசாயி முருகேசன் கைது செய்யப்பட்டார்.

சட்டவிரோதமாக மின்சாரம் எடுத்து விவசாய நிலத்தை சுற்றி மின்வேலி அமைத்திருந்ததாகவும், இந்த மின்வேலியில் சிக்கிதான் 3 யானைகள் ஒரே நேரத்தில் உயிரிழந்தன என்றும் இதனால் முருகேசன் தற்போது கைது செய்யப்பட்டிருப்பதாகவும் போலீசார் கூறியுள்ளனர்.

ADVERTISEMENT

மு.வா.ஜெகதீஸ் குமார்

ஹோலி: விலங்குகள் மீது வண்ணங்கள் பூசினால் நடவடிக்கை!

பெருங்கனவை வெறுங்கனவாக்கும் வெம்மையைப் பொசுக்குவோம்!

Photo of author
Jegadeesh
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share