ADVERTISEMENT

தமிழகத்தில் விஷ சாராயம் குடித்து மூவர் பலி: 24 பேர் உயிருக்கு போராட்டம்… முழு விபரம் என்ன?

Published On:

| By christopher

விழுப்புரம் மாவட்டம் கடலோரப் பகுதியான மரக்காணம் மீனவர் கிராமத்தில் விஷச் சாராயம் குடித்ததில் மூவர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேலும் 24 பேருக்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

விழுப்புரம் மாவட்டம் ஈசிஆர் சாலையில் அமைந்துள்ளது மரக்காணம் பேரூராட்சிக்கு உட்பட்ட மீனவர் கிராமமான எக்கியார் குப்பத்தில், சுமார் ஆயிரம் குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

ADVERTISEMENT

ஏப்ரல் – ஜூன் மாதங்களில் மீன் இனப்பெருக்கம் செய்வதற்காக மத்திய மாநில அரசுகள் கடலில் மீன் பிடிக்க 61 நாட்கள் தடை உத்தரவு பிறப்பிக்கும். அப்படித்தான் கடந்த ஏப்ரல் 15ஆம் தேதி முதல் மீன் பிடிக்க தடை உத்தரவு அமலுக்கு வந்தது.

இதனால் வீட்டு குழம்புக்கும், கை செலவுக்கும் வரும் வகையில் மீனவர்கள் சிறிய போட்டில் சென்று இரண்டு மணி நேரம் அல்லது மூன்று மணி நேரத்தில் சிறிய வலைப்போட்டு மீன் பிடித்து வருவார்கள்.

ADVERTISEMENT

சும்மா இருக்கும் நேரத்தில் சாராயம், பீர், பிராந்தி என்று குடித்துவிட்டு பலர் சீட்டு கட்டு விளையாடுவார்கள். சிலர் வலைகளை சரிபார்ப்பு வேலைகளை செய்வார்கள். 

அப்படித்தான் நேற்று மே 13 ஆம் தேதி மதியம் 1.00 மணியளவில் எக்கியார்குப்பம் பகுதியில் ரெகுலர் சாராய வியாபாரியிடம், சங்கர், தரனிவேல்,சுரேஷ், மண்ணாங்கட்டி, ராமமூர்த்தி உட்பட சுமார் 30க்கும் மேற்பட்டவர்கள் சாராயம் குடித்துள்ளனர். 

ADVERTISEMENT

இரவு நேரத்தில் மயக்கம் வாந்தி என சுருண்டு விழுந்த சுரேஷ் என்பவரை  முதலில் காலப்பட்டில் உள்ள பிம்ஸ் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். 

அதன் பிறகு சங்கர், தரனிவேல் இருவரும் அடுத்தடுத்து சுருண்டு விழுந்ததும் அவர்களை புதுச்சேரி ஜிப்மர் மருத்துவ மனையில் சேர்த்தனர். அவர்களைத் தொடர்ந்து வீதிக்கு மூன்று பேர் என ஊர் முழுக்க சுருண்டு கிடந்த 25க்கும் மேற்பட்டவர்களை இரவு நேரத்தில் ஜிப்மர் மற்றும் முண்டியம்பாக்கம் மருத்துவமனைகளில் சிகிச்சைக்கு சேர்த்தனர். 

தகவல்கள் தெரிந்த விழுப்புரம் எஸ் பி ஸ்ரீநாதா ஐபிஎஸ், வடக்கு மண்டல ஐஜி கண்ணன் போன்ற அதிகாரிகள் இரவே ஸ்பாட்டுக்கு வந்துவிட்டனர், கலவரம் பரவாமல் இருக்க போலீஸ் குவிக்கப்பட்டது.

இரவு முதல் இன்று காலை வரையில் பிம்ஸ் மருத்துவ மனையில் இருந்த சுரேஷ், ஜிப்மர் மருத்துவ மனையில் இருந்த சங்கர் மற்றும் தரனிவேல் மூவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து விட்டனர். 

Three died in marakkanam after drinking illicit liquor

மேலும் ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மண்ணாங்கட்டி, முண்டியம்பாக்கம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ராஜமூர்த்தி இருவரும் உயர் பிழைக்க கஷ்டம் என கை விரிக்கிறார்கள் டாக்டர்கள். 

இன்னும் 22 பேர் முண்டியம்பாக்கம் , ஜிப்மர், சென்னை போன்ற மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரையில் முப்பதுக்கும் மேற்பட்டவர்கள் பாதித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 

விஷ சாராயம் விற்பனை செய்தவர் யார், சப்ளை செய்தது யார், அல்லது சாராயப் போட்டியில் சதிவேலைகள் நடந்திருக்குமா என போலீஸ் அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். 

Three died in marakkanam after drinking illicit liquor

இதற்கிடையே இந்த சம்பவத்திற்கு காரணமானவர்களை கைது செய்யக்கோரி உறவினர்களும் சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்தி வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

அதன்படி முக்கிய குற்றவாளியாக கருதப்படும் மரக்காணத்தைச் சேர்ந்த அமரன் (25) என்பவரை கைது செய்த போலீசார் தற்போது அவரை கண்காணிப்பு வளையத்தில் வைத்து விசாரித்து வருகின்றனர். 

கர்நாடகாவில் களேபரம்: நள்ளிரவில் கைமாறிய காங்கிரஸின் வெற்றி!

டிஎன்பிஎஸ்சி குரூப்-4 பணியிடங்களை அதிகரிக்க வேண்டும்: விஜயகாந்த்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share