அடுத்தடுத்து மூன்று நீதிபதிகள் மாற்றம் : என்ன நடக்கிறது டெல்லியில்?

Published On:

| By Kavi

Three Delhi High Court judges transferred 

இந்திய தலைநகர் டெல்லி உயர் நீதிமன்றத்தில் பணியாற்றிய நீதிபதிகள் அடுத்தடுத்து பணியிட மாற்றம் செய்யப்பட்டது பேசு பொருளாகியிருக்கிறது. Three Delhi High Court judges transferred 

இந்திய உயர் நீதிமன்றங்களில் நீதிபதிகளாக இருப்பவர்கள், மறுசீரமைப்பு  அல்லது நிர்வாக காரணங்களுக்காக பணியிட மாற்றம் செய்யப்படுவார்கள்.  ஆனால் டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதிகள் தொடர்ந்து புகார்களில் சிக்கி அவர்கள் வேறு நீதிமன்றங்களுக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். 

நீதிபதி யஷ்வந்த் குமார் வர்மா

கடந்த மார்ச் 14ஆம் தேதி டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதியான யஷ்வந்த் வர்மாவின் வீட்டில்  தீ விபத்து ஏற்பட்டது, அப்போது அவரது வீட்டிலிருந்து ஏராளமான பணம் மீட்கப்பட்டது. இந்த பணம் எப்படி வந்தது? இதற்கு உரிய ஆவணங்கள் இருக்கிறதா என எந்த தகவலும் இன்று வரை வெளியாகவில்லை.  ஆனால் தனது வீட்டில் பணம் சிக்கியதற்கு  நீதிபதி யஷ்வந்த் குமார் வர்மா மறுப்புத் தெரிவித்திருந்தார். இதுதொடர்பாக  உச்ச நீதிமன்றத்தின் உள்ளக விசாரணை குழு விசாரித்து வருகிறது.  நீதிபதி யஷ்வந்த் குமார் வர்மா டெல்லி உயர் நீதிமன்றத்தில் இருந்து அலகாபாத் உயர் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டார்.  ஆனால் அவரது பணியிட மாற்றத்துக்கு கண்டனம் தெரிவித்த அலகாபாத் பார் அசோசியேசன், “நாங்கள் என்ன குப்பைத் தொட்டியா?” என்று கேள்வி எழுப்பியிருந்தது. 

நீதிபதி தினேஷ் குமார் ஷர்மா

இந்த நிலையில் மற்றொரு நீதிபதியான டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி  தினேஷ் குமார் ஷர்மாவை கொல்கத்தா உயர் நீதிமன்றத்துக்கு மாற்றி உச்ச நீதிமன்ற கொலிஜீயம் பரிந்துரைத்தது.  இதற்கு ஏப்ரல் 1ஆம் தேதி மத்திய அரசு ஒப்புதல் அளித்தது. இந்தநிலையில்  நீதிபதி தினேஷ் குமார் ஷர்மா பணியிட மாற்றத்துக்கு கொல்கத்தா வழக்கறிஞர்கள் சங்கம் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது.  இவர்கள் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணாவுக்கு எழுதியுள்ள கடிதத்தில்,  “நீதிபதியின் நேர்மை மற்றும் செயல்பாடுகளில் குற்றச்சாட்டுகள் உள்ளன.  இதன் காரணமாகவே இடமாற்றம் நடந்திருக்கிறது.   டெல்லி உயர் நீதிமன்றத்தில் அவர் பணியாற்றிய காலத்தில் அக்டோபர் 2024 முதல் அவருக்கு எதிராக கடுமையான புகார்கள் எழுந்துள்ளன என்பது எங்களுக்கு நன்றாகத் தெரியும்”என்று கூறப்பட்டுள்ளது.

நீதிபதி சந்திரதாரி சிங் Three Delhi High Court judges transferred

தொடர்ந்து மேலும் ஒரு நீதிபதியை டெல்லி உயர் நீதிமன்றத்தில் இருந்து அலகாபாத் உயர் நீதிமன்றத்துக்கு மாற்றி உச்ச நீதிமன்ற கொலிஜீயம் பரிந்துரைத்தது.  டெல்லி உயர் நீதிமன்றத்தில் பணியாற்றிய நீதிபதி சந்திர தாரி சிங் மாற்றப்பட்டார்.  இவருக்கு நேற்று டெல்லி உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் பிரியா விடை அளித்தது. 

இப்படி பத்து நாட்களுக்குள் மூன்று நீதிபதிகள் மாற்றப்பட்டுள்ளனர். குறிப்பாக புகார்களில் சிக்கி இடமாற்றம் செய்யப்படுகின்றனர். இது நீதித்துறை மீதான மக்களின் நம்பிக்கையை இழக்கச் செய்யும் வகையில் உள்ளது. Three Delhi High Court judges transferred

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share