Skip to content
  • முகப்பு
  • அரசியல்
      அரசியல்
      டிஜிட்டல் திண்ணை
  • சமூகம்
      தமிழ்நாடு
      இந்தியா
      உலகம்
  • பொழுதுபோக்கு
      செய்தி
      சினிமா விமர்சனம்
      ஓடிடி
      போட்டோ கேலரி
  • பணம்
      பொருளாதாரம்
      சந்தை
      முதலீடு
      வேலைவாய்ப்பு
  • லைஃப்ஸ்டைல்
      உடல்நலம்
      மனநலம்
      வீட்டு மருத்துவம்
      ரெசிப்பி
      பியூட்டி & பேஷன்
  • சிறப்புக் கட்டுரை

இன்ஸ்டா கணக்கை அழிக்காமல் ‘திரெட்ஸ்’ கணக்கை அழிக்கும் வசதி அறிமுகம்!

By Minnambalam

|

Published on 14 Nov 2023, 4:28 PM

threads account delete without losing instagram profile
Follow us on
Google News
Add As A Preferred
Source On A Google

Share:

தற்போது ‘X’ என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ள ட்விட்டர் தளத்திற்கு போட்டியாக, மெட்டா நிறுவனத்தின் சார்பில் ‘திரெட்ஸ்’ என்ற சமூக வலைத்தளம் அறிமுகம் செய்யப்பட்டது.

ஒருவர் தனது இன்ஸ்டாகிராம் கணக்கு மூலம், இந்த ‘திரெட்ஸ்’ தளத்தில் கணக்கை தொடங்கிக்கொள்ளும் வகையில் மெட்டா நிறுவனம் இந்த தளத்தை அறிமுகம் செய்திருந்தது.

ADVERTISEMENT

இன்ஸ்டாகிராமில் பெற்றுள்ள பின் பற்றுபவர்களை, அப்படியே ‘திரெட்ஸ்’ தளத்தில் பெற இந்த வசதி மிகவும் உபயோககரமாக இருந்ததால், பலரும் தங்களது இன்ஸ்டா கணக்கு மூலம், ‘திரெட்ஸ்’ தளத்தில் கணக்குகளை துவங்கினர்.

ஆனால், இவ்வாறு கணக்கு துவங்கியவர் ஒருவேளை தங்கள் திரெட்ஸ் கணக்கை அழிக்க வேண்டும் என்றால், இன்ஸ்டா கணக்கையும் சேர்த்து அழிக்க வேண்டும் என்ற நிலைக்கு தள்ளப்பட்டனர்.

ADVERTISEMENT

மெட்டா நிறுவனத்தின் இந்த நடைமுறை, பயனர்கள் பலரின் மத்தியிலும் கடும் விமர்சனத்தை சந்தித்தது. இந்நிலையில், அந்த சமூக வலைத்தளம் அறிமுகம் செய்யப்பட்ட 4 மாதங்களுக்கு பிறகு, இந்த நடைமுறையில் மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளதாக, இன்ஸ்டாகிராம் தளத்தின் தலைவரான ஆடம் மொசேரி அறிவித்துள்ளார்.

இது குறித்து தனது திரெட்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ள ஆடம் மொசேரி, “இனி பயனர்கள் இன்ஸ்டாகிராம் கணக்கை அழிக்காமலேயே திரெட்ஸ் கணக்கை டெலீட் செய்து கொள்ளலாம்”, என குறிப்பிட்டு அதற்கான வழிமுறையையும் தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT

இதன்மூலம், ஒரு பயனர் ‘Settings → Account → Delete or Deactivate Profile’ என்ற வழிமுறையை பின்பற்றி, அவரது ‘திரெட்ஸ்’ கணக்கை டெலீட் செய்துகொள்ளலாம்.

மேலும், பயனர்கள் திரெட்ஸ் பதிவுகளை முகநூல் மற்றும் இன்ஸ்டா பக்கத்திலேயே பார்த்துக்கொள்ளும் வகையிலான வசதி கடந்த சில நாட்களுக்கு முன்னதாக அறிமுகம் செய்யப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

ஆனால், சிலர் இந்த வசதியை விரும்பாததால், அவர்கள் இந்த வசதியை ‘Settings → Privacy’-க்குள் சென்று அணைத்து வைத்துக்கொள்ளலாம் என்றும் அவர் அறிவித்துள்ளார்.

முரளி

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…

கணவனால் கைவிடப்பட்ட பெண்களுக்கு ஓய்வூதியம்: நீதிமன்றம் உத்தரவு!

கனமழையால் விடுமுறை அறிவிப்பு… கல்லூரி தேர்வுகள் நடைபெறுமா?

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

Minnambalam

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel
சமீபத்திய பதிவுகள்
  • தவெக ஆட்சியில் 6 மாதங்களில் 2,993 டெண்டர்கள் ரத்து – ஆர்.பி.உதயகுமார்

    11 Nov 2026, 10:06 AM

  • Pongal-Train Booking

    பொங்கல் பண்டிகை: ரயில் பயணிகள் கனிவான கவனத்திற்கு.. நவ.13 முதல் முன்பதிவு தொடக்கம்!

    11 Nov 2026, 9:44 AM

  • Digital Thinnai_ TVK MLA

    டிஜிட்டல் திண்ணை: ஆட்சியருக்கே ஆபாச மெசேஜ்.. வசமாக சிக்கிய தவெக எம்.எல்.ஏ.. நெருக்கடியில் 2 அமைச்சர்கள்..அதிரும் கோட்டை.. என்ன நடந்தது?

    11 Nov 2026, 8:53 AM

  • Chennai Two Murders

    சென்னையில் ஒரே நாளில் 2 கொலைகள்- 6 பேர் கைது!

    11 Nov 2026, 8:15 AM

  • Sonia Gandhi Autobiography-Kalaignar

    2003-ல் திமுக- காங்கிரஸ் கூட்டணி, கலைஞருடனான முதல் தொலைபேசி உரையாடல்.. சோனியா காந்தி எழுதியிருப்பது என்ன?

    11 Nov 2026, 7:02 AM

  • Sonia Gandhi- Sonia Gandhi Autobiography

    சோனியா காந்தி ’சுயசரிதை’ சொல்லும் ரகசியங்கள்!

    11 Nov 2026, 5:35 AM

  • TVK Alliance- Vaiko

    விஜய்யின் தவெக கூட்டணியில் மோதல்? வைகோவுக்கு விசிக பதிலடி! இடதுசாரிகளும் ‘பாய்ச்சல்’!

    11 Nov 2026, 3:46 AM

  • Congress Sudha-TVK

    ஆட்சியருக்கு ஆபாச மெசேஜ்.. தவெக எம்.எல்.ஏ. மீது நடவடிக்கை எடுங்க.. காங்.எம்.பி. சுதா வலியுறுத்தல்!

    11 Nov 2026, 3:46 AM

  • Fake Books Scam- Madurai Bench

    “நெஞ்சு பொறுக்குதில்லையே”.. போலி நூல்கள்.. கொதித்த நீதிபதிகள்.. விஜய் அரசுக்கு பறந்த அதிரடி உத்தரவுகள் என்ன?

    10 Nov 2026, 10:31 PM

  • anbil mahesh

    அன்பில் மகேஷ் மீதான வழக்கு ஊழல், பண மோசடி மட்டுமல்ல.. ”பெரிய பொருளாதார குற்றம்”.. ஜாமீன் மனு டிஸ்மிஸ்- தீர்ப்பு முழு விவரம்!

    10 Nov 2026, 8:05 PM

About Us Contact Us Privacy Policy Terms & Condition
© 2026 All Rights Reserved to Minnambalam | Web Developed by Reptus