சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையின் தடையை மீறி தூத்துக்குடி புதூர் பாண்டியாபுரம் சுங்க சாவடியில் சுங்கக் கட்டணம் இன்று வசூலிக்கப்பட்டதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.Thoothukudi Tollgate Collecting Fees
சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையில், தூத்துக்குடியைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் பொதுநலன் மனுவைத் தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், தூத்துக்குடி புதூர் பாண்டியாபுரம், மதுரை எலியார்பத்தி சுங்க சாவடிகளில் மறு உத்தரவு வரும் வரை சுங்க கட்டணம் வசூலிக்க இடைக்கால தடை விதித்தது.
ஆனால் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையின் உத்தரவை மீறி இன்று காலை முதல், தூத்துக்குடி பாண்டியாபுரம் சுங்க சாவடியில் கட்டணம் வசூலிக்கப்படுவதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
