வக்ஃப் திருத்த சட்டத்திற்கு எதிராக விசிக சார்பில் மே 31-ஆம் தேதி திருச்சியில் மதச் சார்பின்மை காப்போம் பேரணி நடத்தப்படும் என்று விசிக தலைவர் திருமாவளவன் அறிவித்திருந்தார். thiumavalavan confirm the date of vck secularism rally
இதையொட்டி ஒவ்வொரு மாவட்ட பொறுப்பாளர்களுடனும் திருமாவளவன் ஆலோசனை மேற்கொண்டு வந்தார்.
இந்த மாநாடு குறித்து கட்சி நிர்வாகிகளிடம் பேசிய திருமாவளவன், “தேர்தல் நெருங்கும் நிலையில், இந்த பேரணி மிகவும் முக்கியத்தும் வாய்ந்தது. குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து தேசம் காப்போம் என்ற பெயரில் திருச்சியில் பேரணி நடத்தினோம். தற்போது வக்ஃப் சட்டத்திருத்தத்திற்கு எதிராக நாம் நடத்தும் பேரணி மதச்சார்பின்மைக்கு ஆபத்து இருக்கிறது என்பதற்கான விழிப்புணர்வு ஏற்படுத்தும் அறப்போராக அமையும்.
மதச்சார்பின்மை குறித்து நாம் எழுப்பும் கேள்விகள் தமிழக தேர்தல் அரசியலின் திசையை தீர்மானிக்கக் கூடியதாக அமையும்” என்று தெரிவித்தார்.
இந்தநிலையில், மே-31-ஆம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்ட மதச் சார்பின்மை காப்போம் பேரணி ஜூன்- 14 அன்று திட்டமிட்டவாறு திருச்சியில் நடைபெறும் என்று திருமாவளவன் இன்று அறிவித்துள்ளார்.