வாரந்தோறும் ரசிகர்களை குறி வைத்து தியேட்டர்களில் பல மொழி திரைப்படங்கள் ரிலீசாகி வருகின்றன. this week theater release movies
அந்தவகையில் மாதத்தின் கடைசி வெள்ளிக்கிழமையை குறிவைத்து நாளை (ஜூலை 25) வெளியாகும் படங்கள் குறித்து இந்த செய்தியில் காணலாம்.
தலைவன் தலைவி
இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி மற்றும் நித்யா மேனன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தலைவன் தலைவி. யோகிபாபு, ரோஷினி, தீபா சங்கர், சரவணன், காளி வெங்கட் ஆகியோரும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். கணவன் – மனைவி இடையே ஏற்படும் பிரச்சனைகளை மையப்படுத்தி, நகைச்சுவை மற்றும் காதல் கலந்த கலகலப்பான படமாக உருவாகியுள்ளது.
மாரீசன்
சுதிஷ் சங்கர் இயக்கத்தில் ஃபகத் பாசில், வடிவேலு நடிப்பில் உருவாகியிருக்கிறது மாரீசன் திரைப்படம். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருக்கும் இப்படத்தை சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது. அல்சைமர் நோயால் பாதிக்கப்பட்ட வடிவேலுவிடமிருந்து, திருட்டில் ஈடுபட்டு வரும் பகத் பாஷில் பணம் பறித்தாரா? இருவரின் பயணம் என்ன ஆனது என்பதை நகைச்சுவையாகவும், சிந்திக்கும் வகையிலும் படம் உருவாக்கப்பட்டுள்ளது.
ஹரி ஹர வீர மல்லு – பார்ட் 1
நடிகரும், ஆந்திர துணை முதல்வருமான பவன் கல்யானின் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியிருக்கும் திரைப்படம் ஹரி ஹர வீரமல்லு. நிதி அகர்வால், பாபி தியோல், சத்யராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். ஆஸ்கர் விருது பெற்ற இசையமைப்பாளர் எம்.எம்.கீரவாணி படத்திற்கு இசையமைத்துள்ளார். பான் இந்தியா படமாக உருவாகியுள்ள இப்படம் தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி ஆகிய 5 மொழிகளில் இன்று (ஜூலை 24) ரிலீஸ் ஆகியுள்ளது.
