குட் பேட் அக்லி, ல்தகா சைஆ… இந்த வார ஓடிடி ரிலீஸ் என்ன?

Published On:

| By Kavi

this week tamil movies ott release

வீக் எண்ட் வந்துவிட்ட நிலையில் சினிமா ரசிகர்கள் ஓடிடி தளங்களில் என்னென்ன படங்கள் ரிலீசாகும் என காத்திருக்கின்றனர். this week tamil movies ott release

அந்த வகையில் இந்த வாரம் குடும்பத்தோடும், நண்பர்களோடும்  பார்த்து ரசிக்க சூப்பர் திரைப்படங்களும், வெப் தொடர்களும் ஓடிடியில் வெளியாகவுள்ளது. 

இந்தியில் உருவாகியுள்ள காமெடி வெப்தொடரான  Gram Chikitsalay,   அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் மே 9ஆம் தேதி வெளியாகிறது. 

The Royals என்ற காமெடி ரொமாண்டிக் வெப்தொடர் நெட்பிலிக்ஸ் ஓடிடி தளத்தில் மே 9ஆம் தேதி வெளியாகிறது.   this week tamil movies ott release

 The Diplomat என்ற பாலிவுட் த்ரில்லர் படம்  நாளை 9ஆம் தேதி மனோரமா மாக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது. 

நாயகன் சதா நாடார்,நாயகி மோனிகா சலினா ஆகியோர் நடிப்பில் வெளியான ‘ல்தகா சைஆ’ திரைப்படம்   நாளை 9ஆம் தேதி டென்ட்கொட்டா ஓடிடி தளத்தில் வெளியாகிறது. 

மலையாள திரைப்படமான Ouseppinte Osyathu மனோரமா மாக்ஸ் ஓடிடி தளத்தில் நாளை வெளியாகிறது. 

அரவிந்த் ராஜகோபால் இயக்கத்தில் ஷாம் நடிப்பில்  வெளியான அஸ்திரம் திரைப்படம்  நாளை 9ம் தேதி ஆஹா ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் குமார், த்ரிஷா, அர்ஜுன் தாஸ் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான  ‘குட் பேட் அக்லி’ திரைப்படம் இன்று நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. this week tamil movies ott release

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share