திரையரங்குகளில் ரிலீஸாகும் திரைப்படங்கள் எப்போது ஓடிடியில் வெளியாகும் என காத்திருக்கும் ரசிகர்களுக்கு விருந்தாக இந்த வாரம் பல சூப்பர் ஹிட் படங்கள் ரிலீஸாகின்றன. this week ott release retro hit 3 thudarum…
அவற்றின் தொகுப்பு இதோ… this week ott release retro hit 3 thudarum…
ரெட்ரோ this week ott release retro hit 3 thudarum…
‘கங்குவா’ தோல்விக்கு பிறகு கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்திருந்த ரெட்ரோ திரைப்படம் கடந்த மே 1 ஆம் தேதி திரையங்குகளில் வெளியானது. இப்படத்தில் பூஜா ஹெக்டே, ஜோஜு ஜார்ஜ்,ஜெயராம், நாசர், பிரகாஷ்ராஜ், கருணாகரன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். கலவையான விமர்சனங்கள் என்றாலும், வசூல் ரீதியாக படம் ஹிட்டானது. இந்த நிலையில் தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் ‘ரெட்ரோ’ இன்று ரிலீசாகியுள்ளது.
தொடரும் this week ott release retro hit 3 thudarum…
எம்புரான் படத்தைத் தொடர்ந்து பெரும் எதிர்பார்ப்போ, விளம்பரமோ இல்லாமல் மலையாள சூப்பர்ஸ்டார் மோகன்லால் நடிப்பில் வெளியான திரைப்படம் தொடரும். எனினும் படத்தின் விறுவிறுப்பான திரைக்கதை ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற நிலையில் வசூலில் சக்கைப்போடு போட்டது. இந்த நிலையில் ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் இன்று வெளியாகியுள்ளது.
ஹிட் 3 this week ott release retro hit 3 thudarum…
கமர்ஷியல் நாயகனாக தெலுங்கு திரையுலகில் அவதாரமெடுத்துள்ள நானியின் நடிப்பில் கடந்த மே 1ஆம் தேதி வெளியான திரைப்படம் ஹிட் 3. படத்தின் முதல் இரண்டு பாகங்களை அவர் தயாரித்திருந்த நிலையில், மூன்றாம் பாகத்தில் அவரே ஹீரோவாக நடித்தார். அவருக்கு ஜோடியாக ஸ்ரீநிதி ஷெட்டியும், கெஸ்ட் ரோலில் நடிகர் கார்த்தியும் தோன்றி ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்தனர். இந்நிலையில் தற்போது நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் படம் வெளியாகியுள்ளது.
டூரிஸ்ட் பேமிலி :
அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் இயக்கத்தில் நடிகர் சசிகுமார், சிம்ரன் நடிப்பில் தியேட்டரில் வெளியாகி சக்கைப்போடு போட்ட திரைப்படம் டூரிஸ்ட் ஃபேமிலி. கடந்த மே ஒன்றாம் தேதி திரையரங்குகளில் வெளியான இப்படத்தை ரஜினி, கமல் முதல் பல்வேறு திரையுலகைச் சேர்ந்த பிரபலங்களும் பாராட்டினர். இந்த நிலையில் இப்படம் ஜூன் 2ந் தேதி ஜியோஹாட்ஸ்டார் தளத்தில் வெளியாக உள்ளது.
நிழற்குடை :
பல ஆண்டுகளுக்கு பிறகு தேவயாணி நடிப்பில் வெளியான திரைப்படம் ‘நிழற்குடை’. சிவா ஆறுமுகன் இயக்கியிருந்த இப்படத்தில் விஜித் கதாநாயகனாகவும் கண்மணி கதாநாயகியாகவும் மற்றும் முக்கிய வேடங்களில் இளவரசு, ராஜ்கபூர் மனோ ஆகியோர் நடித்திருந்தனர். இப்படம் தற்போது ஆஹா ஓடிடி தளத்தில் ரிலீசாகியுள்ளது.
இது தவிர
தமிழ் திரைப்படங்கள் : this week ott release retro hit 3 thudarum…
சீரன் – டெண்ட்கொட்டா
வானில் தேடினேன் – ஆஹா சீரிஸ்
மலையாளத் திரைப்படங்கள் :
ஜெர்ரி – சிம்பிளி செளத்
பிக் பென் – சன் நெக்ஸ்ட்
தெலுங்கு திரைப்படங்கள் :
சௌர்யபாதம் – அமேசான் பிரைம்
கன்னட திரைப்படங்கள் :
அக்ஞாதவாசி – ஜீ 5
வித்யாபதி – சன் நெக்ஸ்ட்
நிமிட்டமாத்ரா – சன் நெக்ஸ்ட்
இந்தி திரைப்படங்கள் :
இண்டராகொசேன் – ஜீ 5
கன் கஜூரா – சோனிலிவ் சீரிஸ்
ஆங்கிலத் திரைப்படங்கள் :
வைட் அவுட் – அமேசான் பிரைம்
வேலியண்ட் ஒன் – அமேசான் பிரைம்
குட்ரிச் – அமேசான் பிரைம்
தி க்ரூக்ட் மேன் – நெட்பிளிக்ஸ்
கேப்டன் அமெரிக்கா பிரேவ் நியூ வேர்ல்ட் – ஹாட்ஸ்டார்
