வீக் எண்ட் மோட் : புதிய படங்களின் லிஸ்ட் இதோ!

Published On:

| By Selvam

விஜய் தேவரகொண்டா நடிப்பில், பூரி ஜெகநாத் இயக்கத்தில் லைகர் திரைப்படம் நேற்று (ஆகஸ்ட் 26) வெளியானது.

தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட ஐந்து மொழிகளில் இப்படம் வெளியானது. இப்படம் கலவையான விமர்சனத்தைப் பெற்று வருகிறது.

அருள்நிதி நடித்துள்ள டைரி திரைப்படம் இன்று (ஆகஸ்ட் 26) வெளியாகிறது. இன்னிசை பாண்டியன் இயக்கியுள்ள இப்படத்தில், பவித்ரா மாரிமுத்து, கிஷோர், ஜெயப்பிரகாஷ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இத்திரைப்படம் கிரைம் த்ரில்லர் வகையைச் சேர்ந்தது.

this week movie release list

பிரித்திவிராஜ் நடித்துள்ள தீர்ப்பு  திரைப்படம் நேற்று (ஆகஸ்ட் 25) வெளியானது. ரத்திஷ் அம்பத் இப்படத்தை இயக்கியுள்ளார்.

இந்திரஜித் சுகுமாரன், இஷா தல்வார் இப்படத்தில் நடித்துள்ளனர். இத்திரைப்படம் நான்கு நண்பர்களைப் பற்றிய கதைக்களத்தில் பயணிக்கிறது.

அவர்கள் நான்கு பேரும் சந்தித்த பிறகு அவர்களது வாழ்க்கையில் ஏற்படும் சிக்கல்களை இப்படம் பேசுகிறது.

சத்யம் ராஜேஷ் நடித்துள்ள களபுரம் தெலுங்கு திரைப்படம் இன்று (ஆகஸ்ட் 26) வெளியாகிறது.

கருணா குமார் இப்படத்தை இயக்கியுள்ளார். சித்ரம் சீனு, சஞ்சிதா பூணாச்சா உள்ளிட்டோர் இப்படத்தில் முதன்மை கதாப்பாத்திரத்தில்  நடித்துள்ளனர்.

this week movie release list

ஒடில்லா ரயில்வே ஸ்டேஷன் தெலுங்கு திரைப்படம் ஆஹா ஓடிடி தளத்தில் இன்று (ஆகஸ்ட் 26) வெளியாகிறது.

இப்படத்தை, அசோக் தேஜா இயக்கியுள்ளார். ஹேபா பட்டேல், பூஜிதா பொன்னடா உள்ளிட்டோர் இப்படத்தில் நடித்துள்ளனர்.

நவீன் சந்திரா நடித்துள்ள ரிப்பீட் திரைப்படம் ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் நேற்று  (ஆகஸ்ட் 25) வெளியானது.

அரவிந்த் ஸ்ரீனிவாசன் இந்த படத்தை இயக்கியுள்ளார். மதுபாலா, மைம் கோபி, காளி வெங்கட் உள்ளிட்டோர் இப்படத்தில் முதன்மை கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.

செல்வம்

‘ராக்கெட்ரி’ திரைப்படம் : 90 % கட்டுகதை’ – விஞ்ஞானிகள் புகார்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share