உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஆஸ்திரேலியாவை ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியதன் மூலம் டெம்பா பவுமா தலைமையில் தென்னாப்பிரிக்கா அணி இதுவரை ஒரு டெஸ்டிலும் தோல்வியடையவில்லை என்ற பெருமையை தக்க வைத்துள்ளது. this is the thug reply to australia : tempa bavuma
தென்னாப்பிரிக்கா நாட்டின் ஹீரோவாக இன்று பார்க்கப்படும் பவுமாவின் ஆரம்பகால கிரிக்கெட் வாழ்க்கை விமர்சனங்களால் நிரம்பியது.
இட ஒதுக்கீட்டின் கீழ் தென்னாப்பிரிக்காவின் வீரராக களம் கண்ட பவுமாவின் தோல்வியைக் காண எப்போது ஆயிரம் கண்கள் காத்திருந்தன.
இந்தியாவில் கடந்த 2023ஆம் ஆண்டு நடந்த ஒருநாள் உலகக்கோப்பை போட்டியில் கேப்டன் பவுமா தலைமையிலான தென்னாப்பிரிக்கா அணி அரையிறுதியில் ஆஸ்திரேலியா அணியிடம் போராடி தோற்றது. அந்த தொடரில் 6 போட்டிகளில் 20.33 சராசரியுடன் 122 ரன்கள் மட்டுமே எடுத்த அவர் கடும் விமர்சனத்திற்கு உள்ளானார்.
பிப்ரவரி 2023 இல் செஞ்சுரியனில் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான தனது முதல் டெஸ்டில் கேப்டனாக இரண்டு முறை டக் அவுட்டாகி ஆட்டமிழந்தார். அதற்காக அவர் தொடர்ந்து விமர்சிக்கப்பட்டார்.
எனினும் அதன்பின்னர் அணியின் முக்கிய வீரராக வலம் வந்த அவர், மூன்று சதங்கள் மற்றும் ஐந்து அரைசதங்களை அடித்தார். மொத்தம் 64 டெஸ்ட் போட்டிகளில், பவுமா 38.22 சராசரியாக 3,709 ரன்களை குவித்துள்ளார்.
மேலும் அவர் கேப்டன் ஆனது முதல் இதுவரை தோல்வியே சந்திக்காமல், 9 போட்டிகளில் வெற்றியும், ஒரு போட்டியில் டிராவையும் சந்தித்துள்ளது. குறிப்பாக அந்த அணி நான்கு கண்டங்களில் தங்கள் கடைசி எட்டு ஆட்டங்களில் வெற்றி பெற்றுள்ளது.
இந்த நிலையில் மிக மிக குறைவான எதிர்பார்ப்புகளை கொண்ட அணியாக கருதப்பட்ட தென்னாப்பிரிக்கா அணி, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்று பலம் வாய்ந்த ஆஸ்திரேலியாவை வீழ்த்தி ஐசிசி கோப்பையை இரண்டாவது முறையாக வென்றது.
இந்த வெற்றிக் குறித்து பவுமா கூறுகையில், “எல்லா விமர்சனங்களையும் மீறி, தேசிய அணியை ஒரு வரலாற்று பட்டத்திற்கு அழைத்துச் சென்ற பிறகு பட்ட அவமரியாதைகள் அனைத்தும் வெற்றிக்கான படிக்கட்டாக தோன்றுகிறது.
தென்னாப்பிரிக்காவின் கேப்டனாக இருப்பது எளிதானது அல்ல, கடந்த காலத்தில் நாங்கள் சந்தித்த அனைத்து தியாகங்களும், அனைத்து ஏமாற்றங்களும், இந்த நேரத்தில் அது மதிப்புக்குரியதாக தோன்றுகிறது.
பைனலில் கூட -Chokers என்ற வார்த்தையை பயன்படுத்தி, சண்டையை தூண்டும் விதமாக ஆஸ்திரேலிய வீரர்கள் சிலர் எங்களிடம் சீண்டலில் ஈடுபட்டனர். இந்த இறுதி யுத்தத்தில் பலர் எங்கள் மீது சந்தேகப்பட்டனர். அதையெல்லாம் நாங்கள் தவிடு பொடி ஆக்கியுள்ளோம். எங்கள் மீதான அனைத்து கேள்விகளுக்கும் இந்த வெற்றியின் மூலம் பதிலளித்துள்ளோம்” என பவுமா தெரிவித்துள்ளார்.
