அல்லு அர்ஜுனின் ‘புஷ்பா 2’ கதை இதுதான் ?

Published On:

| By Minnambalam Login1

Pushpa-2-

சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் கடந்த 2021-ல் திரைக்கு வந்த புஷ்பா படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரும் வரவேற்பை பெற்றது.

இதில் அல்லு அர்ஜுனுடன் இணைந்து ஃபஹத் பாசில், ராஷ்மிகா மந்தனா, ஜெகபதி பாபு, பிரகாஷ்ராஜ் நடித்திருந்தனர். செம்மரக் கடத்தல் பின்னணியில் உருவான இப்படம் உலகம் முழுவதும், சுமார் 500 கோடியை வசூல் செய்தது.

‘காதல் கைகூடியது’ மஞ்சும்மேல் பாய்ஸ் நடிகரை மணக்கும் டாடா ஹீரோயின்!

முதல் பாகத்துக்கு கிடைத்த வரவேற்பால் படத்தின் 2-வது பாகத்தினை, மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் மிகப்பெரும் பட்ஜெட்டில் தயாரித்து வருகிறது. புஷ்பா 2 வருகின்ற சுதந்திர தினத்தன்று (ஆகஸ்ட் 15) வெளியாகவுள்ளது.

இதற்கிடையில் படக்குழு படத்தின் டீசர் வருகின்ற ஏப்ரல் 8-ம் தேதி அல்லு அர்ஜுனின் பிறந்த நாளன்று வெளியாகும் என அறிவித்துள்ளது. இந்த நிலையில் படத்தின் திரைக்கதை குறித்து தற்போது தெரியவந்துள்ளது.

அதன்படி படத்தில் புஷ்பராஜ் (அல்லு அர்ஜுன்) தலைமறைவாக பெண் வேடமிட்டு மறைந்து வாழ்கிறாராம். வருடக்கணக்கில் மறைந்து வாழும் அவர் இடையிடையே யாருக்கும் தெரியாமல், எதிரிகளை அழிப்பது போல திரைக்கதை அமைக்கப்பட்டு இருக்கிறதாம்.

மகாபாரதத்தில் பாண்டவர்கள் மறைந்து வாழும்போது அர்ஜுனன் அதில் பெண் வேடமிட்டு எதிரிகளை வதம் செய்வார். அதுபோல இப்படத்தில் அல்லு அர்ஜுன் எதிரிகளை அழிப்பது தான் படத்தின் மொத்த கதையாம்.

pushpa 2 the rule

அல்லு அர்ஜுன் கேரியரில் மிகப்பெரிய ஹிட் கொடுத்த இப்படத்தின் 3-வது பாகம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

– இரசிக பிரியா மாணவ நிருபர்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

Cyclone Alert: சூறாவளிக்காற்று வீசக்கூடும்… கடலுக்கு செல்ல வேண்டாம்! 

மகளிர் உரிமைத் தொகையை நிறுத்தினால் சும்மா விடமாட்டேன் : எடப்பாடி பழனிசாமி

IPL 2024: தயவுசெஞ்சு நீங்களே டீமை கலைச்சிருங்க… பறக்கும் மீம்ஸ்கள்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share