இது எனக்கு ஸ்பெஷல் தீபாவளி : சிவகார்த்திகேயன்

Published On:

| By Kavi

பிரின்ஸ் படம் திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில் இது எனக்கு ஸ்பெஷல் தீபாவளி என்று சிவகார்த்திகேயன் கூறியுள்ளார்.

நடிகர் சிவகார்த்திகேயன் 2012 ஆம் ஆண்டு பாண்டிராஜ் இயக்கத்தில் வெளியான” மெரினா” படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார்.

ADVERTISEMENT

ரஜினிமுருகன், வருத்தப்படாத வாலிபர் சங்கம் ஆகிய இரண்டு படங்களின் வெற்றி இவரை முன்னணி நாயகர்கள் வரிசைக்கு உயர்த்தியது. வியாபார முக்கியத்துவம்மிக்க நாயகர்களில் ஒருவராக சிவகார்த்திகேயன் உள்ளார்.

கடந்த 10 ஆண்டுகளில் 16 படங்களில் நடித்திருந்தாலும் எந்தப் படமும் தீபாவளி வெளியீடாக வந்ததில்லை சிவகார்த்திகேயன் திரையுலக வாழ்க்கையில் .

ADVERTISEMENT

முதன்முறையாக அவர் நாயகனாக நடித்த பிரின்ஸ் தீபாவளி பண்டிகை படமாக அக்டோபர் 21 அன்று வெளியாகிறது.

தெலுங்கு இயக்குநர் அனுதீப் இயக்கத்தில் தெலுங்கு, தமிழ் என இரு மொழிகளில் தயாரிக்கப்பட்டுள்ள பிரின்ஸ் படத்தின் புரமோஷன் நிகழ்வுக்காக சென்னையில் படக்குழுவினர் பத்திரிகையாளர்களை சந்தித்தனர்.

ADVERTISEMENT

அப்போது சிவகார்த்திகேயன் பேசுகையில்,

“பிரின்ஸ் படத்தின் கதை மிகவும் சிம்பிளான கதை. இந்தியப் பையன், பிரிட்டிஷ் பெண்ணைக் காதலிக்கிறான் என்பதுதான் கதை.

ஆனால், இதில் இயக்குநர் அனுதீப் கொடுத்திருக்கும் காமெடிக்கான ட்ரீட்மென்ட் தான் படத்தில் புதிய விசயம்.

காமெடி என்றால் கவுன்ட்டர் போடாமல் சம்பந்தமேயில்லாத வேறொரு பதில் சொல்வது சில்லியான பதில் சொல்வது ஆகியனவற்றைப் புதிதாகச் சொல்லியிருக்கிறோம்.

படத்தில் காட்சிப்படுத்தபட்டுள்ள ஊர் தமிழ்நாட்டில் இல்லை. அது கற்பனையில் தோன்றிய ஊர். அந்த ஊர், மக்கள் குறித்தும் அங்கு நிலவும் காதல் குறித்தும் ஜாலியாக கொண்டு சேர்க்கும் படமாக இதை உருவாக்கியிருக்கிறோம்.

கதைக்குள் சின்னச் சின்ன சர்ப்ரைஸ் இருக்கும். தீபாவளிக்கு பார்வையாளர்கள் திரையரங்குக்கு வந்து ஜாலியாக படம் பார்க்கும்படி தான் படத்தை எடுத்திருக்கிறோம்

இது அனுதீப்பின் அடையாளமாக இருக்கும். அவருடைய ஸ்டைல் இது. இயக்குநர் அனுதீப் தெலுங்கில் தான் சிந்திப்பார்.

அந்தக் காமெடியை தமிழுக்கு ஏற்ப மாற்றிக் கொண்டு வரவேண்டும். தமிழிலிருந்து ஒரு ஹீரோ, தெலுங்கிலிருந்து ஒரு இயக்குநர் இது க்ளிக் ஆகிவிட்டால் தென்னிந்திய திரைத்துறையில் பல மாற்றங்கள் இருக்கும்.

காரணம் நிறைய நாயகர்கள் ஆப்ஷன்ஸ் இருக்கும், இயக்குநர் கிடைப்பார்கள்,புதிய கூட்டணிகள் அமையும், தயாரிப்பாளர்கள் தயாரிக்க ஆர்வத்துடன் முன்வருவார்கள். அதனால்தான் இதைச் சவாலாக எடுத்துக்கொண்டு செய்திருக்கிறோம். பார்வையாளர்களின் கருத்துக்காகக் காத்திருக்கிறோம்.

கடந்த இருபதாண்டுகளாக தீபாவளி நாளில் திரைப்படங்கள் பார்த்துக்கொண்டிருக்கிறேன். பல கதாநாயகர்களின் படங்களைப் பார்த்துக்கொண்டிருந்தேன்.

முதன்முறையாக தீபாவளியன்று என் படத்தையே பார்க்கும் சந்தோசம் எனக்கு அமைந்திருக்கிறது. அதனால், இந்த தீபாவளி எனக்கு ஸ்பெஷல் என்று கூறினார்.

இராமானுஜம்

துப்பாக்கிச் சூடு – உயிரிழந்தோர் குடும்பத்திற்கு கூடுதலாக ரூ.5 லட்சம்!

தமிழகத்தில் கன மழை:மீனவர்களுக்கு எச்சரிக்கை!

Photo of author
Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share