திருவள்ளூர் சரக்கு ரயில் தடம் புரண்டதாலேயே தீ விபத்து ஏற்பட்டதாகவும் 42 பெட்டிகள் பாதுகாப்பாக அகற்றப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. goods train caught fire
திருவள்ளூர் ரயில் விபத்து தொடர்பான முக்கிய தகவல்களின் தொகுப்பு:
திருவள்ளூர் ஏகாட்டூர் அருகே சரக்கு ரயில் இன்று அதிகாலை திடீரென தடம் புரண்டது.
சரக்கு ரயில் தடம் புரண்டதால் இன்ஜினுக்கு அடுத்ததாக உள்ள பெட்டிகள் தீப்பிடித்தன.
52 பெட்டிகளைக் கொண்ட சரக்கு ரயிலில் 5 பெட்டிகளில் அடுத்தடுத்து தீ பரவின.
தீ விபத்து தகவலைத் தொடர்ந்து திருவள்ளூர் ரயில் நிலைய பணியாளர்கள் விரைந்து சென்று 42 பெட்டிகளை பாதுகாப்பாக அகற்றினர்.
இந்த தீ விபத்தால் கரும்புகை மண்டலம் சூழ்ந்துள்ள நிலையில் அப்பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் அனைவரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.
சரக்கு ரயில் தீவிபத்தை முழுமையாக அணைப்பதற்கு இன்னும் பல மணிநேரங்களாகும்; இன்று மாலைதான் தீ முழுமையாக கட்டுக்குள் கொண்டுவர முடியும் என தீயணைப்புத் துறை வீரர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த தீ விபத்தைத் தொடர்ந்து அப்பகுதியில் 8 எக்ஸ்பிரஸ் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
