திருப்பரங்குன்றம் தீபம்: நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவுக்கு எதிரான வழக்கில் இன்று தீர்ப்பு

Published On:

| By Mathi

Thirupparankundram Deepam Case

திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்றுவது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை தனி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவுக்கு எதிரான தமிழ்நாடு அரசின் மேல்முறையீட்டு மனு மீது இன்று தீர்ப்பு வழங்கப்பட இருக்கிறது.

திருப்பரங்குன்றம் தர்கா அருகே உள்ள கேட்பாரற்ற நில அளவைக் கல் தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற அனுமதி கோரி ரவிக்குமார் என்பவர் மனுத் தாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன், தர்கா அருகே உள்ள தூணில் தீபம் ஏற்ற உத்தரவிட்டார். ஆனால் சட்டம் ஒழுங்கு பிரச்சனையை முன்வைத்து தமிழக அரசு, தர்கா அருகே உள்ள தூணில் தீபம் ஏற்ற அனுமதிக்கவில்லை.

ADVERTISEMENT

மேலும் தனிநீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் உத்தரவுக்கு எதிராக தமிழக அரசு, திருப்பரங்குன்றம் கோயில் நிர்வாகம், மதுரை மாவட்ட ஆட்சியர் மற்றும் தர்கா நிர்வாகம் சார்பில் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

நீதிபதிகள் ஜி. ஜெயச்சந்திரன் மற்றும் கே.கே. ராமகிருஷ்ணன் ஆகியோர் கொண்ட அமர்வு இந்த வழக்கை விசாரித்தது. அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில், இன்று காலை இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்படுகிறது.

ADVERTISEMENT

இதேபோல தர்காவில் நடைபெறும் சந்தனக் கூடு திருவிழாவை முன்னிட்டு திருப்பரங்குன்றம் மலையின் அடிவாரம் முதல் உச்சி வரை ஆடு, கோழிகள் பலியிடுவதற்கும், அசைவ உணவுகளை சமைப்பதற்கும் நீதிபதி ஸ்ரீமதி தடைவிதித்தார். இந்த தடைக்கு எதிராகவும் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share