திருமயம் தொகுதி : உங்கள் எம்.எல்.ஏ. யார்?

Published On:

| By Kavi

தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் 23ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுகிறது.

தேர்தல் பிரச்சாரங்கள் களைகட்டியிருக்கும் நிலையில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்ற போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

ADVERTISEMENT

இந்தசூழலில் நமது மின்னம்பலம் 234 தொகுதிகளிலும் மக்களை நேரடியாக சந்தித்து மெகா சர்வே நடத்தியது.

மார்ச் 20 முதல் மார்ச் 31ஆம் தேதி வரை தமிழ்நாடு முழுவதும் ஒவ்வொரு தொகுதியிலும் 400 பேர் வீதம் 234 தொகுதிகளில் 93,600 பேரிடம் வயது, சாதி எண்ணிக்கைகளுக்கு ஏற்ப
நடத்தப்பட்ட துல்லியமான கருத்து கணிப்பு முடிவுகள் இன்று (ஏப்ரல் 9) முதல் மின்னம்பலம் இணையதளத்தில் வெளியாகிறது.

ADVERTISEMENT

இதில் திருமயம் சட்டப்பேரவைத் தொகுதியை கைப்பற்றப்போவது யார் என பார்க்கலாம்…

(2021 சட்டமன்ற தேர்தல், 2024 மக்களவைத் தேர்தலில் கட்சிகள் பெற்ற வாக்கு சதவீதங்கள்- தற்போதைய 2026 கூட்டணி அடிப்படையில் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன)

ADVERTISEMENT

திருமயம் வாக்காளர்கள் – மொத்தம் – 219,279

வயது வாரியான வாக்காளர்கள் : ஆண்- பெண்

சாதி வாரியான வாக்காளர்கள்

2021 – சட்டப்பேரவை தேர்தல் வெற்றி

2024 – நாடாளுமன்றத் தேர்தல் வெற்றி

2026 – மின்னம்பலம் சர்வே முடிவு

திருமயம் தொகுதியில் சீனியர் அமைச்சர்களில் ஒருவரான ரகுபதி போட்டியிடுகிறார்.

இந்த தொகுதியில 2016, 2021-ல் மிக குறைவான வாக்குகள் வித்தியாசத்தில்தான் அமைச்சர் ரகுபதி வெற்றி பெற்றார். 2016-ல் 766 ஓட்டுகள் வித்தியாசத்திலும் 2021-ல் 1,382 ஓட்டுகள் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றவர் அமைச்சர் ரகுபதி.

கடந்த 2 முறையும் ரகுபதிக்கு டஃப் பைட் கொடுத்த வைரமுத்துதான் இந்தமுறையும் அதிமுக வேட்பாளராக களமிறக்கப்பட்டிருக்கிறார்.

நாம் தமிழர் வேட்பாளர் லட்சுமி சீனிவாசன், தமிழக வெற்றிக் கழக வேட்பாளர் சிந்து ராமசாமி ஆகியோரும் களம்காண்கின்றனர்.

நமது சர்வே முடிவின் படி,

திமுக- 38%
அதிமுக -36%
தவெக-16%
நாதக- 9% வாக்குகள் பெறும்.

திமுக வேட்பாளரான அமைச்சர் ரகுபதி மீண்டும் திருமயம் தொகுதியில் வெற்றி பெற வாய்ப்பிருக்கிறது.

கருத்து கணிப்பின் முடிவுகள் 3% சதவீதம் அதிகமாகவோ அல்லது குறைவாக இருக்கவும் சாத்தியம் உள்ளது.

அடுத்த தொகுதி சர்வே முடிவு விரைவில்…

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share