’ஸ்டாலின் பக்கத்துல உட்காரணும்ப்பா’- தாயின் விருப்பத்தை நிறைவேற்றிய திருமா

Published On:

| By christopher

விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பியின் 60-வது பிறந்த நாள், சென்னை கலைவாணர் அரங்கத்தில் மணிவிழாவாக இன்று (ஆகஸ்ட் 16) கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் இரா.நல்லகண்ணு தலைமை தாங்கும் இந்த நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக பங்கேற்றுள்ளார். அதன்படி விழா மேடைக்கு வந்த அவரை அரங்கத்தில் இருந்த அனைவரும் குரல் எழுப்பி கைத்தட்டி வரவேற்றனர். ஆனால் அவற்றுக்கு எல்லாம் மேலாக அதே மேடையில் திருமாவளவனின் தாயார் பெரியம்மாளின் அன்பு உபசரிப்பு பலரையும் ரசிக்க வைத்தது.

ADVERTISEMENT

தன் மகனிடம் கோரிக்கை வைத்த பெரியம்மாள்!

முதல்வர் ஸ்டாலின் மேடைக்கு வந்ததும், அவரது கைகளை பாசத்துடன் பற்றிய பெரியம்மாள், அவரது உடல்நலன் குறித்து விசாரித்தார். பின்னர் இருக்கையில் ஸ்டாலின், திருமாவளவனுக்கு அடுத்தபடியாக பெரியம்மாள் உட்கார்ந்திருந்த நிலையில், தான் ஸ்டாலின் பக்கத்தில் அமர விரும்புவதாக தன் மகனிடம் கூறினார்.

ADVERTISEMENT

இதனையடுத்து திருமாவளவனும் தனது இடத்தை மாற்றி, ஸ்டாலின் பக்கத்தில் தனது தாயாரை அமர வைத்தார். இதில் மகிழ்ச்சியடைந்த பெரியம்மாள், அருகில் இருந்த முதல்வரிடம் பாசத்துடன் அடிக்கடி பேசி வந்தார். மேலும் மேடையில் அவருடன் சேர்ந்து புகைப்படம் எடுக்கவும் ஆசைப்பட்டார்.

இதனை தொடர்ந்து விழாவுக்கு வருகை தந்த முதல்வருக்கு, தன் கையாலேயே சால்வை அணிவித்து, உற்சாகத்துடன் புகைப்படத்துக்கு போஸ் கொடுத்தார் பெரியம்மாள்.

ADVERTISEMENT

கிறிஸ்டோபர் ஜெமா

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share