திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோவிலில் விசிக தலைவர் திருமாவளவன் இன்று (நவம்பர் 21) சாமி தரிசனம் செய்தார்.
திண்டுக்கல் மாவட்டம் பழனி, ஆயக்குடி உள்ளிட்ட பகுதிகளில் விசிக கட்சி கொடியேற்றுதல் நிகழ்ச்சி மற்றும் நிர்வாகிகள் இல்ல நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக திருமாவளவன் இன்று சென்றிருந்தார்.
இன்று காலை கட்சி நிர்வாகிகளுடன் திருமாவளவன் பழனி கோவிலுக்கு சென்றார். ரோப் கார் மூலமாக கோவிலுக்கு சென்ற திருமா, சிறப்பு பூஜையில் கலந்து கொண்டார். கோவில் நிர்வாகம் சார்பில் திருமாவுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. தேவஸ்தான ஊழியர்கள் பிரசாதங்கள் வழங்கினர்.

பின்னர், படிப்பாதை வழியாக நடந்தே பழனி மலையடிவாரத்திற்கு வந்தார். மலையடிவாரத்தில் உள்ள புலிப்பாணி ஆசிரமத்திற்கு சென்று தொட்டிச்சி அம்மன் மற்றும் புலிப்பாணி ஜீவசமாதியில் வணங்கினார் திருமா.
அங்கு பழனி போகர் ஆதீனம் சிவானந்த புலிப்பாணி சுவாமிகள் திருமாவளவனை வரவேற்று பூஜை செய்து நெற்றியில் திலகமிட்டார். தொடர்ந்து திருமாவுக்கு சால்வை அணிவித்து, போகர் புகைப்படம் மற்றும் ஸ்படிக மாலையை அணிவித்தார்.
புலிப்பாணி ஆசிரமத்திற்கு வெளியே வந்த திருமாவளவனிடம் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டிருப்பதாக நடைபாதை வியாபாரிகள் கோரிக்கை வைத்தனர். அவர்களின் கோரிக்கைகளை அரசின் கவனத்திற்கு எடுத்து செல்வதாக உறுதியளித்துவிட்டு திருமாவளவன் அங்கிருந்து கிளம்பி சென்றார்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
சிபிஐ விசாரணை : எடப்பாடிக்கு ஆர்.எஸ்.பாரதி பதில்!
விசிக மீது திட்டமிட்டு அவதூறு… தொண்டர்களுக்கு திருமா அட்வைஸ்!
