வாக்கு எண்ணும் மையத்திற்கு காலையிலேயே சென்ற திருமாவளவன், கார்த்தி சிதம்பரம்

Published On:

| By Kavi

7 கட்டங்களாக நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்னும் ஒருசில நிமிடங்களில் எண்ணப்படவுள்ளன.

8 மணிக்கு தபால் வாக்குகளும், 8.30 மணிக்கு மின்னணு இயந்திரத்தில் பதிவான வாக்குகளும் எண்ணப்படவுள்ளன.

ஒவ்வொரு சுற்றின் விவரமும், தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும்.

இந்தநிலையில் அரசியல் கட்சியினர், வேட்பாளர்கள், வாக்குச்சாவடி முகவர்கள் என பலரும் காலையிலேயே வாக்குச்சாவடிக்கு சென்றுவிட்டனர்.

வாக்குச்சாவடி முகவர்கள் கடும் சோதனைக்கு பிறகே வாக்கு எண்ணும் மையத்திற்குள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் இன்று (ஜூன் 4) காலை சிவகங்கை எம்.பி.யும் காங்கிரஸ் வேட்பாளருமான கார்த்திக் சிதம்பரம் தனது வீட்டில் இருந்து புறப்பட்டு, அழகப்பா செட்டியார் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையத்துக்குச் சென்றார்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், துல்லியமான தேர்தல் முடிவுகள் வரபோகிறது. ஏன் எக்ஸிட் போல் பற்றி பேசிக்கொண்டிருக்கிறீர்கள் என கூறிவிட்டு காரில் புறப்பட்டார்.

அதுபோன்று சிதம்பரம் தொகுதிக்கு உட்பட்ட தபால் வாக்குகள் சீல் வைக்கப்பட்ட அறையை, சிதம்பரம் நாடாளுமன்ற தேர்தல் நடத்தும் அலுவலர் ஆணி மேரி ஸ்வர்ணா மற்றும் அனைத்துக் கட்சி முகவர்கள் முன்னிலையில் திறக்கப்பட்டது.

அங்கிருந்து தத்தனூர் எம்ஆர்சி கல்லூரி வாக்கு எண்ணும் மையத்திற்கு தபால் வாக்கு பெட்டிகள் கொண்டு செல்லப்பட்டன.


சிதம்பரம் தொகுதி வேட்பாளரும், விசிக தலைவருமான திருமாவளவனும் வாக்கு எண்ணும் மையத்திற்கு வந்து அங்கு நடைபெறும் பணிகள் குறித்து பூத் முகவர்களிடம் கேட்டறிந்தார்.

இதுபோன்று அனைத்து தொகுதிகளிலும் வாக்கு எண்ணிக்கைக்கான பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

பிரியா

பலத்த பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் மையத்திற்கு வந்த தபால் வாக்கு பெட்டிகள்!

SA vs SL : தட்டுத்தடுமாறி இலங்கையை வீழ்த்திய தென் ஆப்பிரிக்கா!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share