சினிமாவில் காலாவதியான காலத்தில் அரசியலுக்கு வந்து அங்கீகாரம் பெறுகின்றனர் என்று நடிகர் விஜய்யை மறைமுகமாக சாடியுள்ளார் திருமாவளவன். thiruma attack vijay political path
தருமபுரி மாவட்டம் கம்பைநல்லூரில் பட்டாசு தொழிற்சாலையில் கடந்த 24ஆம் தேதி ஏற்பட்ட தீ விபத்தில் திருமலர், திருமஞ்சு, செண்பகம் என மூன்று பெண்கள் உயிரிழந்தனர்.
இந்த நிலையில் அவர்களின் குடும்பத்தினரை நேற்று (பிப்ரவரி 27) சந்தித்து ஆறுதல் கூறிய திருமாவளவன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் தலா ரூ.1 லட்சம் நிதி உதவி வழங்கினார்.
உடனே கட்சி.. அடுத்து ஆட்சியாம்… thiruma attack vijay political path
பின்னர் அங்கு நடைபெற்ற நிகழ்ச்சியில் அவர் பேசுகையில், “வரும் காலத்தில் பல துரோகத்தை கடக்க வேண்டியுள்ளது. ஒரு மாநிலக் கட்சி என்ற அங்கீகாரம் பெற்றிருக்கிறோம். அதற்கே 25 வருடம் நாம் படாதபாடு பட்டுள்ளோம். 10 வருடங்கள் தேர்தல் அரசியல் வராமல் மொத்தத்தில் 35 ஆண்டுகள் ஒரு மாநில கட்சி என்ற அங்கீகாரத்தை பெறுவதற்கே பெரும்பாடு பட நேர்ந்தது.
சில பேர் 50, 60 வயது வரையிலும் சினிமாவில் நடித்து, புகழை தேடி, பொருளை தேடி, சுகத்தை தேடி, சொகுசாக வாழ்ந்துவிட்டு இளமை காலத்தையெல்லாம் சொகுசாக கழித்துவிட்டு, தேவையான அளவுக்கு சொத்து சேர்த்து வைத்து கொண்டு காலாவதியான காலத்தில் அரசியலுக்கு வந்து அங்கீகாரமும் பெறுகிறார்கள்.
அவர்கள் ஊரு ஊராக சென்று இப்படி அலையவேண்டியது இல்லை. ஊரு ஊராக சென்று கொடியேற்ற தேவையில்லை. ஊரு ஊராக சென்று மக்களை சந்தித்து அவர்களிடம் பேசவேண்டியது இல்லை. உடனே கட்சியை தொடங்கலாம் அடுத்து ஆட்சிக்கு போகலாம் என நினைக்கிறார்கள்.
ஆனால் எனது இளம் வயதில் இருந்தே, நான் மிகவும் கடினமாக உழைத்திருக்கிறேன். சாப்பிட வேண்டிய நேரத்தில் சாப்பிடாமல், தூங்கவேண்டிய நேரத்தில் சரியாக தூங்காமல் இருந்துள்ளேன். திரைப்படம் பார்க்க சென்றதில்லை, கடற்கரைக்கு சென்றதில்லை, ருசியாக சாப்பிட ஸ்டார் ஹோட்டலுக்கு சென்றதில்லை.
இப்படி நான் 35 ஆண்டுகள் அரும்பாடுபட்டு உழைத்த பிறகே விசிக மாநிலக் கட்சி அங்கீகாரம் பெற்ற கட்சியாய் மாறியிருக்கிறது. ஆனால் அப்படி இருந்தும், நமது வளர்ச்சியைப் பிடிக்காத சாதி வெறிபிடித்த கும்பல், நமது கொடிக்கம்பத்தை வெட்டி எறிகிறார்கள். மதவாத வெறிபிடித்த கும்பல், நம்மை குறித்து அவதூறு பரப்புகிறார்கள்.
என்னை விலை கொடுத்து வாங்க முடியாது! thiruma attack vijay political path
நான் சராசரி மனிதனாக இருந்திருந்தால் எப்போதோ அரசியல் அங்கீகாரம் பெற்றிருக்க முடியும். நேற்று ஒரு கொள்கை, இன்று ஒரு கொள்கை என வாழ்ந்திருக்க முடியும். ஆனால் அம்பேத்கர், பெரியாரின் கொள்கைகளில் எனக்கு தெளிவு இருக்கிறது. அதை மக்களிடம் எடுத்துசொல்ல துணிவு இருக்கிறது. அதனால் என்னை யாராலும் விலை கொடுத்து வாங்க முடியாது.
நடைபெறவுள்ள 2026 சட்டமன்றத் தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சி இல்லாமல் எந்த அரசியல் நகர்வும் இருக்காது. இதை நான் கர்வத்தோடு சொல்லவில்லை. அரசியல் வல்லுனர்களே ஆராய்ந்து சொல்லி இருக்கிறார்கள்” என திருமாவளவன் பேசினார்.
விஜய் மீது தொடர் விமர்சனம்! thiruma attack vijay political path
ஏற்கெனவே தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டில், ’கூட்டணி கட்சிக்கு ஆட்சி அதிகாரத்தில் பங்கு’ என விஜய் பேசியதற்கு திருமாவளவன் கடும் கண்டனம் தெரிவித்திருந்தார்.
தவெக 2ஆம் ஆண்டு துவக்க விழா அக்கட்சியின் தலைவர் விஜய் தலைமையில் நேற்று மகாபலிபுரத்தில் நடைபெற்றது.
இந்த நிலையில் அவரை குறிவைத்தே, ’சில பேர் 50, 60 வயது வரையிலும் சினிமாவில் நடித்து, புகழை தேடி, பொருளை தேடி, சுகத்தை தேடி, சொகுசாக வாழ்ந்துவிட்டு காலாவதியான காலத்தில் அரசியலுக்கு வந்து அங்கீகாரம் பெறுகிறார்கள்” என திருமா பேசியுள்ளதாக அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.