திருச்சிற்றம்பலம் ஓடிடி ரிலீஸ் எப்போது?

Published On:

| By Selvam

திருச்சிற்றம்பலம் திரைப்படம் கடந்த ஆகஸ்ட் மாதம் 18ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

தனுஷ் நடித்த இத்திரைப்படத்தை மித்ரன் ஜவஹர் இயக்கியுள்ளார். நித்யா மேனன், பிரியா பவானி சங்கர், பாரதி ராஜா உள்ளிட்டோர் முதன்மை கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தனர். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்த இப்படத்திற்கு, அனிருத் இசையமைத்திருந்தார்.

ADVERTISEMENT

இப்படத்தின் பாடல்கள் முதலில் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. இதனால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்தது.

திருச்சிற்றம்பலம் திரைப்படம் வெளியான முதல் நாளே நேர்மறையான விமர்சனங்களைப் பெற்றது. குறிப்பாக நித்யா மேனன், தனுஷ் நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டது.

ADVERTISEMENT

இதனால் தொடர்ச்சியாக அரங்கம் நிறைந்த காட்சிகளாகப் படம் ஓடியது. விநாயகர் சதுர்த்திக்கு கோப்ரா திரைப்படம் வெளியான போதும் திருச்சிற்றம்பலம் திரைப்படம் தொடர்ச்சியாகத் திரையரங்குகளில் நல்ல வசூல் பார்த்தது.

இதனால் ரூ.100 கோடிக்கும் மேல் வருவாய் குவித்த திருச்சிற்றம்பலம் திரைப்படம் இன்னும் திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது.

ADVERTISEMENT

இந்நிலையில், திருச்சிற்றம்பலம் திரைப்படம் செப்டம்பர் 23-ஆம் தேதி முதல் சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இதனால் தனுஷ் ரசிகர்கள் மிகவும் உற்சாகத்தில் உள்ளனர்.

செல்வம்

மீண்டும் ஹீரோவாக பான் இந்தியா படத்தில் ராமராஜன்

உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக டி.ராஜா நியமனம்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share