திருச்செந்தூர் விடுதி ஊழியர் கொலை : வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ய வலியுறுத்தல்

Published On:

| By Pandeeswari Gurusamy

தலித் இளைஞர் ஏழுமலைவாசன் கொலை வழக்கில் SC/ST வன்கொடுமைதடுப்புச்சட்டத்தின் கீழ் கைது நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீலம் பண்பாட்டு மையம் வலியுறுத்தி உள்ளது.

இட்டமொழி, வடக்குத் தெருவைச் சோ்ந்தவா் இசக்கியப்பன் மனைவி புனிதா (35). இவரை கடந்த 8 வருடங்களுக்கு முன்பு கணவா் விட்டுச்சென்றதால் தற்போது புனிதா திருச்செந்தூா், வீரராகவபுரம் தெருவில் குழந்தைகளுடன் வசித்து வருகிறாா்.

ADVERTISEMENT

இவருக்கும் திருச்செந்தூா் தனியாா் விடுதியில் தூய்மை பணியாளராகப் வேலை செய்து வந்த அதேபகுதியைச் சோ்ந்த ஏழுமலை வாசனுக்கும் (27) பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், வியாழக்கிழமை புனிதாவின் வீட்டுக்கு ஏழுமலைவாசன் வந்த போது ராஜா என்பவரால் குத்தி கொலை செய்யப்பட்டார்.

இது குறித்து நீலம் பண்பாட்டு மையம் எக்ஸ் பதிவில்,”தூத்துக்குடிமாவட்டம், திருச்செந்தூர், பெஞ்சமின் காலனியில் தலித் இளைஞர் ஏழுமலைவாசன் (வயது27) எதிர்வீட்டில் குடியிருக்கும் ஆதிக்க சாதிவெறிக் கொண்ட (தகப்பன் உள்ளிட்ட இரு மகன்கள்) மூவரால் கத்தியால் குத்தி படுகொலைச் செய்யப்பட்டுள்ளார்.

ADVERTISEMENT

கொலையாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். தந்தை மற்றும் இரு மகன்கள் உள்ளிட்ட மூவர் மீதும் கொலை வழக்குப் பதிவுச் செய்து SC STவன்கொடுமைதடுப்புச்சட்டத்தின் கீழ் கைது நடவடிக்கை எடுக்க வேண்டும்,கொலை செய்யப்பட்ட ஏழுமலை வாசன் உடல் தூத்துக்குடி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

தமிழக அரசு உடனடியாக பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு உரிய பாதுகாப்பும் நீதியும் வழங்கிட வேண்டும்.” இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share