திருச்செந்தூரில் ராக்கெட் ஏவுதளம்: இஸ்ரோவின் புதிய திட்டம்.

தமிழகம்

ஆந்திரா, ஸ்ரீஹரிக்கோட்டாவில் சதிஷ்தவான் விண்வெளி மையத்தில் இஸ்ரோவிற்கு சொந்தமான இரண்டு ஏவுதளம் இருக்கின்றது. இதனையடுத்து, தற்போது, தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூருக்கு அருகே உள்ள குலசேகரப்பட்டினம் தேர்வு செய்யப்பட்டு மூன்றாவதாக ஒரு ஏவுதளம் அமைக்கப்போவதாக இஸ்ரோ அறிவித்திருந்தது.

இந்த மூன்றாவது ஏவுதளமானது ஸ்ரீஹரிக்கோட்டாவில் உள்ள விண்வெளி மையத்திலேயே அமைக்கப் போவதாக கடந்த 2012 ஆம் ஆண்டு இஸ்ரோ அறிவித்திருந்தது. ஆனால், தற்போது திருச்செந்தூர் அருகே குலசேகரப்பட்டினத்தில் இஸ்ரோ சார்பில் ஏவுதளம் அமைக்க திட்டமிட்டு அதற்கான பணிகளை துவங்கியுள்ளது வருவாய் துறை.

ராக்கெட் ஏவுதளம் அமைப்பதற்காக குலசேகரப்பட்டினத்தை சுற்றியுள்ள கிராமங்களான அமராபுரம், கூடல்நகர், அழகப்பபுரம், மாதவன்குறிச்சி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து நிலங்களை கையகப்படுத்தி நில அளவீடுகள் செய்யும் பணியினை வருவாய் துறையினர் துவங்கியுள்ளனர்.

சுமார் 2.50 கிலோ மீட்டர் சுற்றளவில் 3500 ஏக்கர் பரப்பளவில் ராக்கெட் ஏவுதளம் அமைக்கப்படுகிறது. இதற்காக திருச்செந்தூர் வட்டாச்சியர் ஆய்வாளர் தலைமையில் வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், தலையாரிகள் அப்பகுதியில் உள்ள நில அளவீடுகள் மற்றும் மரங்கள் கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதற்கு அடுத்தபடியாக பொதுப்பணித்துறை நில மதிப்பீடு பணி முடிந்தவுடன் ராக்கெட் ஏவுதளம் அமைக்கப்பட்டும் என்று தெரிவித்துள்ளனர்.

உலகளவில் வளர்ந்து வரும் பெரிய சர்வதேச விண்வெளி நிலையங்களில் இஸ்ரோ 6 வது இடத்தில் உள்ளது. மேலும் பல ராக்கெட் ஏவுதலை விண்ணில் செலுத்துவதற்காக புதிய எவுதளம் அமைக்கும் பணியில் இஸ்ரோ ஈடுபட்டுள்ளது.

மோனிஷா

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published.