இரவில் செய்யும் சில தவறுகளால் உடல் எடை கூடும். அதனால் உடல்நலம் பாதிக்கப்பட்டு அழகாக இருக்க வேண்டும் என்கிற நினைப்பு நிறைவேறாமலேயே போகும் என்கிறார்கள் பொதுநல மருத்துவர்கள். Things not to eat after dinner
சிலருக்கு இரவு உணவு முடிந்த உடனேயே காபி குடிக்கும் பழக்கம் இருக்கும். காபியில் உள்ள காஃபின் தூக்கத்தைக் கெடுக்கும். இந்த பழக்கம் எடையை அதிகரிக்க வழிவகுக்கும்.
அடுத்து, தினசரி தேவையான அளவு தண்ணீர் குடிப்பது நல்லதுதான். ஆனால் இரவு உணவுக்குப் பிறகு அதிகம் உட்கொள்வது செரிமான செயல்பாட்டில் தலையிடும். எடையை அதிகரிக்கச் செய்யும்.
இரவு சாப்பிட்ட உடனே தூங்குவதும் நல்லதல்ல. இந்த தவற்றை பலர் செய்கிறார்கள். சாப்பிட்ட உணவு ஜீரணிக்க 10-15 நிமிட நடைப்பயிற்சி அவசியம். இல்லையெனில், செரிமானமின்மை காரணமாக, வாய்வு பிரச்சினை ஏற்பட்டு எடையை அதிகரிக்கும்.
உணவுக்குப் பின் இனிப்பு சாப்பிடும் வழக்கம் இந்திய வீடுகளில் பல ஆண்டுகளாக இருந்து வருகிறது. இது திருப்தி உணர்வைத் தருவதாக நம்பப்படுகிறது. ஆனால், இரவு உணவுக்குப் பிறகு இனிப்புகளைச் சாப்பிடும்போது ரத்தத்தில் சர்க்கரை அளவை அதிகரித்து, கூடுதல் எடையை உண்டாக்கும். Things not to eat after dinner
எனவே அழகான உடல் அமைப்பைப் பெற நினைப்பவர்கள், இரவில் இந்த தவறுகளை செய்யாதீர்கள் என்று பொதுநல மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள்.