ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்ற குக் வித் கோமாளி சீசன் 5 குறித்து, புதிய தகவல் ஒன்று வெளியாகி இருக்கிறது.
விஜய் தொலைக்காட்சியை பொறுத்தவரை பல்வேறு ரியாலிட்டி ஷோக்களை நடத்தி வந்தாலும் கூட, குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு என தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.
குக்குகளும், அவருக்கு துணையாக கோமாளிகளும் சேர்ந்து சமையல் செய்யும் போது அடிக்கும் லூட்டிகள் தான் இந்த நிகழ்ச்சியின் பிரதானம்.
வழக்கமாக பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்ததும் குக் வித் கோமாளி குறித்த அறிவிப்பு வெளியாகும். ஆனால் இந்த வருடம் இன்னும் நிகழ்ச்சி குறித்த அறிவிப்பு வெளியாகவில்லை.

இந்த நிலையில் குக் வித் கோமாளி நிகழ்ச்சி விரைவில் தொடங்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
மேலும் போட்டியாளர்கள் குறித்தும் யூகங்கள் வெளியாகி இருக்கின்றன. அதனடிப்படையில் பார்க்கும் போது நடிகைகள் வடிவுக்கரசி, தீபா வெங்கட், ஹேமா (பாண்டியன் ஸ்டோர்ஸ்), மாளவிகா மேனன் ஆகியோர் கலந்து கொள்ள இருக்கின்றனராம்.
இதேபோல நடிகர்கள் உமாபதி ராமையா, விஷ்ணு விஜய் (பிக்பாஸ்) மற்றும் நடன இயக்குநர் ஸ்ரீதரின் மகள் அக்சிதா ஆகியோரும் நிகழ்ச்சியில் பங்கு கொள்ள உள்ளார்களாம்.
கடந்த சீசன்கள் போலவே இதற்கு நடுவர்களாக வெங்கடேஷ் பட், தாமு இருவரும் இருப்பர் என கூறப்படுகிறது. அதேபோல நிகழ்ச்சியை ரக்ஷன் மற்றும் மணிமேகலை தொகுத்து வழங்க இருக்கிறார்களாம்.
இதனால் விரைவில் குக் வித் கோமாளி சீசன் 5 குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு, சேனல் தரப்பில் இருந்து வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
–மஞ்சுளா
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
