இந்தியாவை விட சீனாவுக்கு முன்னுரிமை: நேரு மீது ஜெய்சங்கர் குற்றச்சாட்டு!

Published On:

| By indhu

நேரு பிரதமராக இருந்தபோது, இந்தியாவை விட சீனாவுக்கு தான் முன்னுரிமை அளித்தார் என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் இன்று (ஏப்ரல் 3) தெரிவித்துள்ளார்.

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இன்று (ஏப்ரல் 3) தொழில் மற்றும் வர்த்தக சபை கூட்டம் நடைபெற்றது. இதில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் பங்கேற்று இருந்தார்.

ADVERTISEMENT

அப்போது பேசிய அவர், “முன்னாள் பிரதமர் நேரு, இந்தியாவை விட சீனாவுக்கு முன்னுரிமை அளிக்கும் நிலைப்பாட்டைக் கொண்டிருந்தார்.

1950ல் அப்போதைய உள்துறை அமைச்சராக இருந்த சர்தார் பட்டேல், பிரதமராக இருந்த நேருவிடம் சீனாவை பற்றி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ADVERTISEMENT

“இதற்கு முன் இல்லாத வகையில் இன்று நாம் பாகிஸ்தான், சீனா என இருமுனைகளில் பிரச்சனைகளை எதிர்கொண்டு வருகிறோம். சீனர்களின் நோக்கங்கள் வித்தியாசமாகத் தோன்றுவதால் அவர்களிடம் நாம் முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் ” என படேல் தெரிவித்துள்ளார்.

ஆனால், நேரு “நீங்கள் சீனர்கள் மீது தேவையில்லாமல் சந்தேகப்படுகிறீர்கள், இமயமலையைத் தாண்டி யாரும் இந்தியாவை தாக்குவது சாத்தியமில்லை” எனத் தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT

சில ஆண்டுகளுக்கு பிறகு ஐக்கிய நாடுகள் சபை பற்றிய விவாதம் நடைபெற்றது. அந்நேரத்தில் ஐ.நா. பாதுகாப்பு அவையில் இந்தியாவுக்கு நிரந்தர இடம் கொடுக்கப்படுமா? என்ற விவாதம்தான் அது.

அப்போது பேசிய நேரு, “ஐநா பாதுகாப்பு அவையில் நிரந்தர உறுப்பினராக இந்தியா இருப்பதற்கான தகுதி நம்மிடம் உள்ளது. ஆனால், முதலில் சீனாவுக்கு இடம் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

இன்று நாம் முதலில் இந்தியா தான் என்று பேசி வருகிறோம். ஆனால், சீனாதான் முதல் என பிரதமராக இருந்த நேரு பேசிய காலம் உண்டு.

முன்னாள் பிரதமர் நேருவின் கடந்த கால தவறுகளால்தான் பாகிஸ்தான் காஷ்மீரை ஆக்கிரமித்தது மற்றும் இந்தியப் பகுதியின் சில பகுதிகளை சீனா ஆக்கிரமித்தது.

இருப்பினும், மோடி தலைமையிலான மத்திய அரசு, கடந்த 10 ஆண்டுகளில், கால காலமாக இருந்து வந்த பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதில் உறுதியாக உள்ளது.

இன்று நாம் நமது எல்லைகளைப் பற்றி பேசும்போது, சிலர் நமது எல்லைகளை பழையபடி மாற்றுங்கள் என்று கூறுகிறார்கள். நமது எல்லைகள் இன்னமும் நமது எல்லைகள்தான்.

அதை நாம் ஒருபோதும் சந்தேகிக்கக்கூடாது”என ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

 

இந்து

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

இவிஎம் மெஷின்… சந்தேகம் கிளப்பும் ஆர்.எஸ்.பாரதி

அல்லு அர்ஜுனின் ‘புஷ்பா 2’ கதை இதுதான் ?

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel

Comments are closed.

Share