“தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி என்ற பேச்சே கிடையாது” : செல்லூர் ராஜூ

Published On:

| By christopher

தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி என்ற பேச்சே கிடையாது. மக்கள் ஏற்க மாட்டார்கள் என்று முன்னாள் அதிமுக அமைச்சர் செல்லூர் ராஜு கூறியுள்ளார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் நேற்று தனது சமூக வலைதளத்தில் ‘ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு’ என்று பேசிய பழைய வீடியோவை வெளியிட்டு இருந்தார். அதன் பின் ஒரு சில நிமிடங்களில் அந்த வீடியோ நீக்கப்பட்ட நிலையில் அது பெரும் விமர்சனத்திற்கு உள்ளானது.

இதுகுறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய போது, அதை அட்மினிடம் தான் கேள்வி கேட்க வேண்டும் என்றவர், நேற்று மாலை மீண்டும் அதே வீடியோவை திருமாவளவன் பதிவு செய்தார். இது தமிழக அரசியலில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் பேரறிஞர் அண்ணா பிறந்தநாளையொட்டி, மதுரையில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு, முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தலைமையில் சென்று அதிமுக நிர்வாகிகள் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

பின்னர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், “தமிழ்நாட்டில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக ஆட்சியை பிடிக்கும். தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி என்ற பேச்சே கிடையாது. மக்கள் ஏற்க மாட்டார்கள்.

திமுக அல்லது அதிமுக என்ற திராவிட கட்சிகள் மட்டுமே ஆட்சிக்கு வர முடியும். கூட்டணி கட்சிகளுக்கு ஆட்சியில் பங்கு தந்தால் நல்லாட்சியாக அமையாது” என்று செல்லூர் ராஜூ கூறியுள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கிறிஸ்டோபர் ஜெமா

Chess Olympiad 2024: தொடரும் ஆதிக்கம்… 4வது சுற்றில் ‘இந்தியா’ முதலிடம்!

”விசிக மாநாடுக்கு பாமகவின் ஆதரவு உண்டு, ஆனால்..” : திருமாவை எச்சரித்த அன்புமணி

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share