என்னை கொல்ல சதிதிட்டம் நடப்பதாக மதுரை ஆதீனம் கூறியுள்ளார். There is a conspiracy to kill me
அனைத்துலக சைவ சித்தாந்த மாநாடு இன்று (மே 3) சென்னை காட்டாங்குளத்தூரில் உள்ள தனியார் பல்கலைக் கழகத்தில் நடைபெற்று வருகிறது.
இதில் தருமபுரம் ஆதீனம், மதுரை ஆதினம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டுள்ளனர்.
இந்த மாநாட்டில் பங்கேற்க மதுரையிலிருந்து ஆதீனம் நேற்று காரில் சென்னை வந்தார்.
உளுந்தூர்பேட்டை அருகே வந்து கொண்டிருந்தபோது மதுரை ஆதீனம் பயணித்த கார் மீது மற்றொரு கார் மோதி விபத்துக்குள்ளானது.
இந்த சம்பவத்தில் நல்வாய்ப்பாக யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை.
தொடர்ந்து விபத்துக்குள்ளான காரிலேயே மதுரை ஆதீனம் சென்னை வந்தடைந்தார்.
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த தருமபுரம் ஆதீனம், “மதுரை ஆதீனத்தின் கார் விபத்துக்குள்ளானது திட்டமிட்ட சதி. கார் சேதமடைந்த போதும் இறையருளால் மதுரை ஆதீனம் உயிர்த்தப்பினார். அவருக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும்” என்று வலியுறுத்தியிருந்தார்.
இந்த நிலையில் இன்று (மே 3) செய்தியாளர்களிடம் பேசிய மதுரை ஆதீனம், “பிளான் செய்து என்னை கொல்ல வந்திருக்கின்றனர். நான் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கவில்லை. சிவபெருமானிடம் கொடுத்திருக்கிறேன். காரை இடித்தவர்கள் குல்லா போட்டிருந்தார்கள். தாடி வைத்திருந்தார்கள். நான் அரசுக்கும் எதுவும் சொல்ல விரும்பவில்லை. அரசு ஒரு சமயத்தை தான் சார்ந்து இருக்கிறது. சிறுபான்மையினருக்கு தான் நிறைய சலுகை கொடுக்கிறார்கள். எல்லா அரசியல் கட்சிகளும் அப்படித்தான் இருக்கின்றன. வக்ஃபு போர்டு சட்டத்துக்கு எல்லா அரசியல் கட்சிகளும் கண்டனம் தெரிவித்தன. There is a conspiracy to kill me
ஆனால் விபூதியை கிண்டல் செய்கிறார்கள். இந்த விபத்து நடந்தது குறித்து மத்திய அரசு வரை தகவல் சென்றிருக்கிறது. பாதுகாப்பு கொடுத்தாலும் பரவாயில்லை. இல்லையென்றாலும் பரவாயில்லை. நான் பாகிஸ்தானை பற்றி சொன்னதால்தான் இது நடந்திருக்கிறது. பாகிஸ்தானை விட்டு விடக்கூடாது” என்றார்.
ஆதீனத்தின் டிரைவர் கூறுகையில், “எங்கள் கார் மீது இடித்தவர்கள் இஸ்லாமியர்கள். அவர்கள் வண்டியில் நம்பர் பிளேட் இல்லை. பேரிகார்டுகளை தாண்டி வந்து எங்களை இடித்தனர். எங்கள் மீது மோதிவிட்டு வண்டியை நிறுத்தவே இல்லை” என்று கூறினார். There is a conspiracy to kill me
