நாளை வெள்ளிக்கிழமை திரையரங்குகள் மற்றும் ஓடிடியில் என்னென்ன படங்கள் வெளியாகிறது என்று இந்த செய்திக்குறிப்பில் பார்க்கலாம்.
மின்மினி cinema update
பூவரசம் பீபீ, சில்லு கருப்பட்டி போன்ற படங்களை இயக்கிய ஹலீதா ஷமீம் இயக்கியிருக்கும் மின்மினி படத்தைப் பிரபல ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா தயாரித்திருக்கிறார். ஏ.ஆர். ரஹ்மானின் மகள் கதீஜா ரஹ்மான் இசையமைத்திருக்கிறார்.
அந்தகன்
நடிகரும் பிரசாந்த்தின் அப்பாவான தியாகராஜன் இயக்கியிருக்கும் அந்தகன் படத்தில் பிரசாந்த், சிம்ரன், சமுத்திரகனி, பிரியா ஆனந்த், யோகி பாபு ஆகியோர் நடித்துள்ளார்கள். சந்தோஷ் நாராயணன் இந்த படத்திற்கு இசை அமைத்துள்ளார். இது இந்தி படமான ‘அந்தாதூனின்’ ரீமேக்.
இவ்விரு படங்களும் நாளை (ஆகஸ்ட் 9) திரையரங்குகளில் வெளியாகிறது.
ஓடிடியில் வெளிவர இருக்கும் படங்கள்
இந்தியன் 2
ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாஸன், சித்தார்த், ப்ரியா பவானி சங்கர், விவேக், எஸ்.ஜே சூர்யா ஆகியோர் நடிப்பில் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்ற இந்தியன் 2 நெட்ஃப்ளிக்ஸில் வெளியாகிறது.
ஃபிர் ஆயி ஹசீன் தில்ரூபா
தாப்ஸி பண்ணு, விக்ராந்த் மாஸே முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்கும் இந்தப்படம் நேரடியாக நெட்ஃப்ளிக்ஸில் வெளியாகிறது. இந்த படம் 2021-இல் தாப்ஸி பண்ணு நடிப்பில் வெளியான ஹசீன் தில்ரூபா படத்தின் இரண்டாம் பாகம்.
டர்போ
மமூட்டி நடிப்பில் வைசாக் இயக்கிய மலையாளத் திரைப்படம் சோனி லிவ்வில் வெளியாகிறது. இத்திரைப்படம் மே மாதம் 23-ஆம் தேதி திரையரங்கில் வெளியானது.
–அப்துல் ரஹ்மான்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
திடீரென்று ஏறிய தங்கம் விலை…..
வெறும் 1 கிலோ வித்தியாசத்தில் பதக்கத்தை தவறவிட்ட ‘மீராபாய் சானு’
தங்கம் தென்னரசு, கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரனை தொடர்ந்து அனிதா ராதாகிருஷ்ணனுக்கு நீதிமன்றம் தந்த ஷாக்!