ஈரோட்டில் விஜய் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் பேசிக்கொண்டிருந்த போது தொண்டர் ஒருவர் அங்கிருந்த கம்பத்தில் ஏறியதால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவுயது.
நடிகர் விஜய் ஈரோடு விஜயமங்கலம் சரளை பகுதியில் நடந்து வரும் பிரச்சாரக் கூட்டத்தில் பேசிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு இருந்த கம்பத்தில் தொண்டர் ஒருவர் ஏறி உச்சியில் நின்றார்.
கூட்டத்தில் பேசிக்கொண்டிருந்த விஜய் தொண்டரின் செயலைப் பார்த்து பார்த்து அதிர்ச்சி அடைந்து “தம்பி கீழ இறங்குப்பா.. கீழ இறங்குப்பா..ப்ளீஸ் கீழ இறங்குப்பா.. நீ கீழே இறங்கினால் தான் முத்தம் கொடுப்பேன்.என்று பேசினார். இதனால் கூட்டத்தில் சிறிது நேரம் பதற்றமான சூழல் நிலவியது.
பின்னர் அந்த தொண்டர் பத்திரமாக கீழே இறங்கிய பிறகு தனது இரு கைகளை நீட்டி முத்தம் கொடுத்த விஜய் தனது பேச்சை மீண்டும் தொடங்கினார்.
கம்பத்தில் ஏறிய தொண்டர் வீடியோ
