Union Budget 2026: பயோ-பார்மா துறைக்கு ரூ.10,000 கோடி

Published On:

| By Pandeeswari Gurusamy

2026-27ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று காலை 11 மணியளவில் தொடங்கி வாசித்து வருகிறார்.
தடைகளைத் தாண்டி சீர்திருத்தங்களைக் கொண்டுவர வேண்டும் என்பதில் பிரதமர் மோடி உறுதியாக உள்ளார். அனைவருக்குமான வளர்ச்சி, நிலையான பொருளாதாரம், மக்களின் விருப்பங்களை நிறைவேற்றுவது என மூன்று முக்கிய கடமைகளின் அடிப்படையில் மத்திய பட்ஜெட் தயாராகியுள்ளது என்றார்.
பயோ பார்ம் துறைக்கு ரூ.10,000 கோடி ஒதுக்க மத்திய அரசு முன்மொழிவதாக பட்ஜெட் உரையில் குறிப்பிட்டுள்ளார்.வளர்ச்சியை விரைவுபடுத்துவதற்கும் உற்பத்தித் திறனை அதிகரிப்பதற்கும் மத்திய அரசு விரிவான சீர்திருத்தங்களை மேற்கொண்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
பயோஃபார்ம் துறையை முன்னேற்றப் பாதையில் கொண்டு வர அண்மையில் 350க்கும் மேற்பட்ட சீர்திருத்தங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. சீர்திருத்த நடவடிக்கைகள் சிறப்பாக நடந்து வருகின்றன என்றார்.
  • பாரம்பரிய தொழிகளை ஊக்குவிக்க 200 பிரத்யேக பூங்காக்கள் அமைகப்படும்.
  • ஐஐஎம் உதவியுடன் 20 சுற்றுலாத் தளங்களில் 10,000 சுற்றுலா வழிகாட்டிகளுக்கு பயிற்சி அளிக்கப்படும்.
  • ரூ.5,000 கோடி முதலீட்டில் நாடு முழுவதும் பொருளாதார மண்டலங்கள்
  • கண்டெய்னர்கள் உற்பத்தியை அதிகரிக்க ரூ.10,000 கோடி ஒதுக்கீடு! செய்யப்படும் என்றும் அறிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share