தீவுத்திடலில் பட்டாசுக் கடை: டெண்டருக்கு தடை விதிக்கக் கோரி வழக்கு!

Published On:

| By Selvam

தீபாவளியை முன்னிட்டு சென்னை தீவுத்திடலில் பட்டாசு கடை ஒதுக்கீடு தொடர்பான டெண்டருக்கு தடை விதிக்க வேண்டும் என்று பட்டாசு விற்பனையாளர்கள் நல சங்கம் அளித்த மனுவை இரண்டு வாரங்களில் பரிசீலிக்குமாறு தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னை தீவுத்திடலில் ஆண்டுதோறும் பட்டாசு கடைகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டு, விற்பனை நடந்து வருகிறது.

வரும் அக்டோபர் 31-ம் தேதி தீபாவளி கொண்டாடப்பட உள்ள நிலையில், தீவுத்திடலில் கடை அமைப்பது தொடர்பாக பட்டாசு விற்பனையாளர்கள் நல சங்கம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடரப்பட்டது.

அதில், ‘சென்னை பாரிமுனை பந்தர் தெரு, ஆண்டர்சன் தெரு, என்எஸ்சிபோஸ் சாலை உள்ளிட்ட ஏழு இடங்களில் பட்டாசு கடை நடத்துவோருக்கு தீவுத்திடலில் பட்டாசு விற்பனை கடைகள் ஒதுக்கும்போது முன்னுரிமையுடன் சலுகைகள் அளிக்க வேண்டும் என்று உயர் நீதிமன்றம் கடந்த 2006-ம் ஆண்டு உத்தரவிட்டுள்ளது.

ஆனால், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் டெண்டர் மூலமாக கடைகளை ஒதுக்கி வருகிறது. இதில், தகுதி இல்லாத பலருக்கும் கடைகள் ஒதுக்கப்படுவதால், ஏற்கெனவே பட்டாசு தொழில் நடத்திவரும் விற்பனையாளர்கள் பாதிக்கப்படுகின்றனர்.

எனவே, சென்னை பட்டாசு விற்பனையாளர்கள் நல சங்க உறுப்பினர்களுக்கு தீவுத்திடலில் தனி இடம் அல்லது வேறு இடம் ஒதுக்க வேண்டும். இதுதொடர்பாக தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்திடம் மனு கொடுத்தும் பதில் இல்லை.

எனவே, எங்களது மனுவை பரிசீலிக்கும் வரை, தீவுத்திடலில் பட்டாசு கடை ஒதுக்கீடு தொடர்பான டெண்டருக்கு தடை விதிக்க வேண்டும்’ என்று அதில் கோரப்பட்டிருந்தது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எம்.தண்டபாணி, இதுதொடர்பாக பட்டாசு விற்பனையாளர்கள் நல சங்கம் கொடுத்த மனுவை தமிழக அரசு, சுற்றுலா வளர்ச்சி கழகம் தரப்பு இரண்டு வாரங்களில் பரிசீலித்து முடிவெடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.

ராஜ்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

டாப் 10 நியூஸ்: இலங்கை அதிபர் தேர்தல் ரிசல்ட் முதல் தாம்பரம் மின்சார ரயில் ரத்து வரை!

ஹெல்த் டிப்ஸ்: எடைக்குறைப்புக்கு உதவுமா பழங்களும் சூப்பும்?

சண்டே ஸ்பெஷல்: சமையலுக்கு ஏற்றது பெரிய வெங்காயமா? சின்ன வெங்காயமா?

கனமழைக்கு வாய்ப்பு : எந்தெந்த மாவட்டங்களில்?

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share