தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் பொதுக்குழு கூட்டம் சென்னை திருவான்மியூரில் உள்ள ராமச்சந்திரா கன்வென்ஷன் சென்டரில் இன்று (மார்ச் 28) நடைபெற்றது. the super think behind vijay entry in tvk gm
பொதுவாக தவெகவின் மீட்டிங், மாநாடு என்றாலே அக்கட்சியின் தலைவர் விஜய்யின் வருகை உன்னிப்பாக கவனிக்கப்படும்.
இதனால் பனையூரில் நடைபெறும் சாதாரண கட்சி ஆலோசனைக் கூட்டமாய் இருந்தாலும் சரி, கட்சியின் மாநாடாய் இருந்தாலும் சரி, விஜய்யின் மாஸ் என்ட்ரியைக் காண பல்லாயிரம் கண்கள் காத்து கிடக்கும்.
இந்த நிலையில் தான் இன்று காலை 10 மணிக்கு சரியாக பொதுக்குழு கூட்டம் தொடங்க இருந்த நிலையில் அதற்கு முன்னதாக விஜய்யின் வருகைக்காக கட்சியினர் ராமச்சந்திரா அரங்கத்தின் மெயின் கேட்டையே நோக்கி கண் வைத்து காத்திருந்தனர். நேரம் ஆக, ஆக அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஆனந்த் கூட, விஜய் எப்போது வருவார், எப்படி வருவார் என வாசலையே பார்த்து கொண்டிருந்தார்.

எளிமையான என்ட்ரி! the super think behind vijay entry in tvk gm
ஆனால் சரியாக 9. 55 மணிக்கு மேடையின் பக்கவாட்டு வழியாக அரங்கத்திற்குள் நுழைந்தார் விஜய். கட்சி நிர்வாகிகளை நோக்கி கையசைத்தபடியே உள்ளே வந்தவர், முதல் வரிசையில் இருந்த தனது பெற்றோரை சந்தித்து ஆசி பெற்று சரியாக 10.02 மணிக்கு மேடையேறினார்.
பொதுவாக அரசியல் கட்சித் தலைவர்கள் தங்களது வருகையை அனைவருமே திரும்பி பார்க்கும் வகையில் பலத்த ஏற்பாடுகளை செய்வார்கள். ஆனால் விஜய் தனது கட்சியின் முதல் பொதுக்குழு கூட்டத்தில் எளிய முறையில் கொடுத்த என்ட்ரி பலரையும் கவனிக்க வைத்துள்ளது.

இதுதொடர்பாக அவரது கட்சியினரிடத்தில் நாம் விசாரித்தபோது,
அதிகாலையே வந்துவிட்டார்… the super think behind vijay entry in tvk gm
பொதுக்குழு நடைபெறும் ராமச்சந்திரா அரங்கத்திற்கு இன்று அதிகாலை 5.30 மணிக்கே வந்துவிட்டார் விஜய். அங்கிருந்த தனியறைக்கு சென்ற விஜய், சிசிடிவி காட்சிகள் மூலம் நிகழ்ச்சி ஏற்பாடுகள், க்யூஆர் கோடு உள்ளிட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள், நிர்வாகிகளின் வருகை உள்ளிட்டவற்றை கண்காணித்தார்.
அதனைத்தொடர்ந்து தான் நிகழ்ச்சி தொடங்குவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு அரங்கிற்குள் எந்தவித ஆர்ப்பாட்டமும் இன்றி எளிமையாக நுழைந்துள்ளார்.
விஜய் இவ்வளவு சீக்கிரமாக அதிகாலையிலேயே வந்ததற்கு மற்றொரு காரணமும் சொல்லப்படுகிறது.

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு! the super think behind vijay entry in tvk gm
அதாவது, இன்று தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் தொடங்குகின்றன. சென்னை நீலாங்கரை – திருவான்மியூர் பகுதிகளில் பல பள்ளிகள் உள்ளன.
நீலாங்கரையில் உள்ள தனது வீட்டில் இருந்து திருவான்மியூர் வரும்போது, தனது காரை சுற்றி கார்களிலும், பைக்கிலும் தொண்டர்கள் வருவார்கள். இதனால் போக்குவரத்து அப்போது பாதிக்கப்படுவதுண்டு.
இதனை முன்கூட்டியே உணர்ந்து தான், தன்னால் தேர்வு எழுதச் செல்லும் மாணவர்களுக்கு எந்தவித நெருக்கடியும் ஏற்பட்டுவிட கூடாது என்பதற்காக இந்த முடிவை விஜய் எடுத்துள்ளார் என்கின்றனர் அவருக்கு நெருக்கமானவர்கள்.
திரையுலகில் நேரத்தை சிறப்பாக கடைபிடிப்பவர்களாக உச்சநட்சத்திரங்களான ரஜினிகாந்த் மற்றும் விஜய் பார்க்கப்படுகின்றனர். இதனை அவருடன் பணிபுரிந்தவர்களே பல்வேறு இடங்களில் கூறியுள்ளனர். இந்த நிலையில் கட்சி ஆரம்பித்துள்ள விஜய்,அரசியலிலும் தனது கட்சியினருக்கும் நேரத்தை கடைபிடிக்க வேண்டும் வழிகாட்டியிருக்கிறார் என்றே சொல்லலாம்.

அண்ணாமலைக்கு பதிலடி!
இதற்கிடையே பெண்களை மையமாக வைத்து விஜய்யை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை விமர்சனம் செய்திருந்தார். இதற்கு அக்கட்சியினர் சமூகவலைதளங்களில் பதிலடி கொடுத்து வந்தனர்.
இந்த நிலையில் இன்று மதியம் 2 மணிக்கு பொதுக் குழு முடிந்ததும், தனது கட்சி பெண் நிர்வாகிகளுடன் அமர்ந்து உணவருந்தி அண்ணாமலைக்கு பதிலடி கொடுத்துள்ளார் விஜய்.