ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருக்கும் வெப் சீரிஸ் ‘ஸ்குவிட் கேம்’ 2வது சீசன் வரும் டிசம்பர் 26ஆம் தேதி நெட்ஃபிளிக்ஸில் வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நெட்பிளிக்ஸ் தளத்தில் கடந்த 2021ஆம் ஆண்டு வெளியான தென் கொரியா வெப் சீரிஸான ‘ஸ்குவிட் கேம்’ ரசிகர்களிடம் மிகப்பெரும் வரவேற்பை பெற்றது.
ஆங்கிலத்தில் வெளியாகி இந்தியாவில் பெரிய வெற்றியைப் பதிவு செய்த ‘ஸ்குவிட் கேம்’, தொடர்ந்து இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளிலும் வெளியானது.
கடனில் இருப்பவர்களை தங்களை காப்பாற்றி கொள்ள ஒரு விளையாட்டில் பங்கேற்கிறார்கள். வெற்றி பெற்றால் அடுத்தடுத்த கட்டங்களுக்கு சென்று இறுதியில் பெருந்தொகை வழங்கப்படும். அதே வேளையில் தோற்றால் கொடூரமாக கொல்லப்படுவார்கள்.
இதனை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்ட ஸ்குவிட் கேம்’ உலகின் பிரபலமான எம்மி விருதையும் வென்றது.
அடுத்த சீசன்கள் வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில் ரீலீஸ் எப்போது என்பதை அதன் தயாரிப்பாளர்கள் சஸ்பென்சாக வைத்திருந்தனர்.
இந்த நிலையில் ‘ஸ்குவிட் கேம்’ 2வது சீசன் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு விடுமுறையை குறிவைத்து வரும் டிசம்பர் 26-ம் தேதி நெட்ஃபிளிக்ஸில் வெளியாக உள்ளதாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக டீசரும் தற்போது வெளியாகியுள்ளது.
மேலும் இதன் 3வது மற்றும் கடைசி சீசன் 2025-ல் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கிறிஸ்டோபர் ஜெமா
”அருந்ததியருக்கு உள் ஒதுக்கீடு வழங்கியது செல்லும்” : உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!