ரிசர்வ் வங்கியின் (RBI) நிதிக் கொள்கைக் குழு, வங்கிகளின் குறுகிய காலக் கடன்களுக்கான ரெப்போ வட்டி விகிதத்தை மாற்றாமல் 5.25 சதவீதமாகவே தொடர முடிவு செய்துள்ளது என இன்று (பிப்ரவரி 6) ரிசர்வ் வங்கி ஆளுநர் அறிவித்துள்ளார்.
மூன்று நாள் நிதிக் கொள்கை ஆய்வுக் கூட்டம் நடைபெற்ற நிலையில், ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கைக் குழு ரெப்போ வட்டி விகிதத்தை மாற்றாமல் 5.25 சதவீதமாகவே தொடர ஒருமனதாக எடுத்துள்ளதாக ஆர்பிஐ ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா இன்று தெரிவித்தார். மேலும், நிதிக் கொள்கை நிலைப்பாடு “நடுநிலை” என்ற அளவிலேயே தொடரும் என்றும் கூறினார்.
தற்போதைய பொருளாதார நிலைமைகளை விரிவாக ஆய்வு செய்த பின்னரே இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அவர் விளக்கினார். இந்திய பொருளாதாரம் நெகிழ்வுத்தன்மை கொண்டதாக உள்ளது என்றும், உள்நாட்டு பணவீக்கம் மற்றும் வளர்ச்சி குறித்த கண்ணோட்டம் நேர்மறையாக இருப்பதாகவும் குறிப்பிட்டார்.
மேலும், அமெரிக்காவுடனான வர்த்தக ஒப்பந்தம் பொருளாதாரத்திற்கு சாதகமாக அமையும் என்றும் நம்பிக்கை தெரித்துள்ளார்.
இந்த முடிவால் வீட்டுக் கடன், வாகனக் கடன் உள்ளிட்ட கடன்களின் வட்டி விகிதங்களில் உடனடி மாற்றம் ஏற்படாது. ரிசர்வ் வங்கி கடந்த டிசம்பரில் ரெப்போ வட்டி விகிதத்தை 0.25 சதவீதம் குறைத்து 5.25 சதவீதமாக நிர்ணயித்திருந்த நிலையில், தற்போது அதே விகிதம் தொடர்கிறது.
