சென்னை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று இரவு கனமழை பெய்தது. அதன்படி, மயிலாப்பூர், ஐஸ் ஹவுஸ், அண்ணா நகர், நந்தனம், கிண்டி , அரும்பாக்கம், நுங்கம்பாக்கம், ராயப்பேட்டை, சைதாப்பேட்டை, கோடம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது.
மேலும், கிண்டி, ஆலந்தூர், மீனம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளிலும் கனமழை பெய்தது. நகரின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது.
இந்நிலையில், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இன்று (ஆகஸ்ட் 18) ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்று (ஆகஸ்ட்18) தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவித்துள்ளது.
மேலும், நாளை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று கூறப்பட்டுள்ளது.
மு.வா.ஜெகதீஸ் குமார்
திருமாவுக்கு வாழ்த்து சொன்ன விஜய்: பின்னணி இது தான்!