நீரில் மிதந்த இளைஞர்.. மீட்க சென்ற போலீஸ்.. காத்திருந்த அதிர்ச்சி!

Published On:

| By indhu

The police who went to rescue the youth who floated in the lake were shocked

தெலுங்கானாவில் ஏரியில் மிதந்து கொண்டிருந்த இளைஞரை மீட்க சென்ற காவல்துறையினர் அதிர்ச்சியடைந்தனர். அப்படி என்ன நடந்ததுன்னுதானே கேட்குறீங்க..

தெலுங்கானா மாநிலத்தில் உள்ள வாராங்கல் மாவட்டம் ஹநுமன்கொண்டா, ரெட்டிபுரம் பகுதியில் உள்ள ஏரியில் நீண்ட நேரமாக ஒரு ஆணின் உடல் எவ்வித அசைவும் இல்லாமல் இருந்ததால் அவர் இறந்து விட்டதாக சந்தேகம் அடைந்த அப்பகுதி மக்கள் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

ADVERTISEMENT

தகவல் அறிந்த கக்கட்டியா யூனிவர்சிட்டி காவல் துறையினர், ஏரிக்கு விரைந்து வந்து இளைஞரை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

அந்த ஆணின் உடலை குளத்தில் இருந்து இழுக்கும் போது ஆண் உயிருடன் எழுந்து வந்ததால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். குளத்தில் இருந்த நபர் நெல்லூரில் உள்ள காவாலி பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளி என்று தெரியவந்தது.

ADVERTISEMENT

அந்த நபரிடம் காவல்துறையினர் நடத்திய விசாரணையில், “நான் காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை கிரானைட் குவாரியில் வேலை செய்து வருகிறேன். எனக்கு சம்பளம் கொடுத்தாலும் எனது உழைப்பை துஷ்பிரயோகம் செய்கிறார்கள்.

இவ்வளவு வெயிலில் ஒருவரால் எப்படி நீண்ட நேரத்திற்கு வேலை செய்ய முடியும். களைப்பாக இருந்ததால் ஏரியில் குளிக்க வந்தேன்” என்று தெரிவித்துள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக வைரலாகி வருகிறது.

ADVERTISEMENT

இந்து

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: திமுக வேட்பாளர் அறிவிப்பு

ஜூன் 20 சட்டமன்றம் கூடும் : சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share