லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிப்பில் இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் “லால் சலாம்” படம் உருவாகியுள்ளது.
3, வை ராஜா வை ஆகிய படங்களை தொடர்ந்து ஐஸ்வர்யா இயக்கியுள்ள 3வது படம் இது. லால் சலாம் படத்தில் நடிகர்கள் விஷ்ணு விஷால், விக்ராந்த் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்க, நடிகர் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கிறார்.
லால் சலாம் படத்தில் ரஜனியின் காட்சிகள் 20 நிமிடங்கள் மட்டுமே இடம்பெறும் என்று கூறப்படுகிறது. இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.
சமீபத்தில் லால் சலாம் படத்தின் டீசர் மற்றும் பாடல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
இந்த ஆண்டு பொங்கலுக்கு லால் சலாம் படம் வெளியாகும் என்று முதலில் அறிவிக்கப்பட்டது. ஆனால் தனுஷ், சிவகார்த்திகேயன் படங்கள் ரிலீஸ், குறைந்த தியேட்டர்கள் எண்ணிக்கை போன்ற காரணங்களால் அது திரும்ப பெறப்பட்டது.
இதனை தொடர்ந்து தற்போது லால் சலாம் படத்தின் புதிய ரிலீஸ் தேதி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Namma THER THIRUVIZHA'ku Alappara kelappa neram vandhachu! 🤩 LAL SALAAM 🫡 hits the big screen 📽️✨ on February 9th 2024! Save the date! 🗓️#LalSalaam 🫡 @rajinikanth @ash_rajinikanth @arrahman @TheVishnuVishal @vikranth_offl @LycaProductions #Subaskaran @gkmtamilkumaran… pic.twitter.com/CbYHQ4J0sq
— Lyca Productions (@LycaProductions) January 9, 2024
அதன்படி அடுத்த மாதம் பிப்ரவரி 9 ஆம் தேதி லால் சலாம் படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை முன்னிட்டு புது போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
கார்த்திக் ராஜா
துணைவேந்தர் தேடுதல் குழு: திரும்ப பெற்றார் ஆளுநர் ஆர்.என்.ரவி
பிக்பாஸ் மிட் வீக் எவிக்ஷனில் வெளியேறிய போட்டியாளர் இவர்தான்!
