ADVERTISEMENT

கனெக்ட் திரைப்படம்: விக்னேஷ் சிவன் தொடர்ந்த வழக்கு!

Published On:

| By Kalai

நயன்தாரா நடிப்பில் வெளியாகி உள்ள கனெக்ட் திரைப்படத்தை இணையதளங்களில் வெளியிடுவதை தடுக்கக்கோரி விக்னேஷ் சிவன் வழக்குத் தொடர்ந்துள்ளார்.

அஸ்வின் சரவணன் இயக்கத்தில் நயன்தாரா நடிப்பில், உருவாகியுள்ள ஹாரர் திரில்லர் திரைப்படம் கனெக்ட். சத்யராஜ், அனுபம் கெர், வினய் ராய் உள்ளிட்ட பிரபலங்கள் நடித்துள்ள இந்தப்படம் 22-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகியது.

ADVERTISEMENT
ADVERTISEMENT

இடைவெளி இல்லாமல் 99 நிமிடங்கள் திரைப்படம் ஓடுகிறது. நேற்று வெளியான கனெக்ட் திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இந்தநிலையில், இந்தப் படத்தை இணையதளங்களில் சட்டவிரோதமாக வெளியிடுவதை தடுக்கக் கோரி ரௌடி பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் விக்னேஷ் சிவன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

ADVERTISEMENT

இணையதளங்களில் வெளியிடுவதை தடுக்க, 29 இணையதள சேவை நிறுவனங்களுக்கு உத்தரவிட வேண்டுமென அவர் கோரிக்கை வைத்துள்ளார். இந்த வழக்கு நீதிபதி சி.சரவணன் முன்பு இன்று(டிசம்பர் 23) விசாரணைக்கு வந்தது.

அப்போது, பட நிறுவனம் தரப்பில் வழக்கறிஞர் விஜயன் சுப்ரமணியன் ஆஜராகினார். “நேற்று திரைக்கு வந்த இந்த திரைப்படத்தை திருட்டுத்தனமாக இணையதளங்களில் வெளியிட்டால் பெரும் நஷ்டம் ஏற்படும்.

ADVERTISEMENT

திரைத்துறையினரின் வாழ்க்கை பாதிக்கப்படும் என்பதால் சட்டவிரோதயாக வெளியிட தடை விதிக்க வேண்டும் என்று வாதிட்டார்.

இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, கனெக்ட் திரைப்படத்தை சட்டவிரோதமாக இணையதளங்களில் வெளியிடுவதை தடுக்கும்படி, 29 இணைய தள சேவை நிறுவனங்களுக்கு நீதிபதி சரவணன் உத்தரவிட்டுள்ளார்.

கலை.ரா

கொரோனா: மத்திய சுகாதார அமைச்சரிடம் மா.சு சொன்ன தகவல்!

16 ராணுவ வீரர்கள் மரணம்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel

Comments are closed.

Share