சூப்பர் ஹீரோ படங்கள் என்று சொன்னாலே அயன் மேன், கேப்டன் அமெரிக்கா, தோர் கதாபாத்திரங்கள் தான் அனைவரின் ஞாபகத்திற்கு வரும். அந்த அளவிற்கு மார்வெல் படங்கள் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
அவெஞ்சர்ஸ் எண்ட் கேம் படத்திற்கு பின் வெளியான மார்வெல் படங்களுக்கு நல்ல ஓபனிங் கிடைத்திருந்தாலும், தொடர்ந்து கலவையான விமர்சனங்களை தான் மார்வெல் படங்கள் பெறுகின்றது.
தற்போது இந்த கலவையான விமர்சனங்களை சரி கட்டும் விதமாக “தி மார்வெல்ஸ்” திரைப்படம் அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வரும் நவம்பர் 10 ஆம் தேதி தி மார்வெல்ஸ் படம் வெளியாக உள்ள நிலையில் தற்போது இந்தியாவில் இந்த படத்திற்கான புரோமோஷன் பணிகளை மார்வெல் நிறுவனம் தொடங்கிவிட்டது.
ஹைதராபாத்தில் நடைபெற்ற தி மார்வெல்ஸ் படத்தின் புரோமோஷன் நிகழ்ச்சியில் நடிகை சமந்தா கலந்து கொண்டார். தி மார்வெல்ஸ் படத்தில் வரும் கேப்டன் மார்வெல் கதாபாத்திரத்திற்கு நடிகை சமந்தா தான் டப்பிங் பேசியுள்ளார் என்ற தகவலும் வெளியாகி உள்ளது.
MARVELlous Samantha at 'The Marvels' Event!🦸♀️
Samantha recently joined the promo event for #TheMarvels in Hyderabad.
Looking cool, dressed in a black jacket, jeans, and a white crop top, she even posed with superheroes!
Get ready to be wowed!📸💥#SamanthaXTheMarvels… pic.twitter.com/Ie4daRSIJX
— Uma Madhavi (@mrs_persistent) November 3, 2023
மேலும் இந்த நிகழ்ச்சியில், எந்தெந்த இந்திய நடிகர்கள் மார்வெல் படத்தில் நடிக்க பொருத்தமாக இருப்பார்கள் என்று நடிகை சமந்தாவிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு,
“அல்லு அர்ஜூன், விஜய், பிரியங்கா சோப்ரா” ஆகியோர் மார்வெல் படங்களில் நடிக்க பொருத்தமாக இருப்பார்கள்” என்று நடிகை சமந்தா பதில் அளித்தார்.

உடல் நலக்குறைவு காரணமாக ரெஸ்ட் எடுத்து வந்த சமந்தா, தற்போது இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டதால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சமந்தாவின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
– கார்த்திக் ராஜா
டாப் 10 செய்திகள்… இதை மிஸ் பண்ணாதீங்க!
4 மாவட்டங்களில் இரவு வரை கனமழை நீடிக்கும் – வானிலை மையம் எச்சரிக்கை!
